April 12, 2021

பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் – தமிழக அரசு

தமிழகத்தில் இன்னும் கொரோனா இருந்து வரக்கூடிய நிலையில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக கருதி பல்வேறு தரப்பிலிருந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் பள்ளிகளை இப்போது திறக்க வேண்டாம் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கூட கடிதம் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். பெற்றோர், ஆசிரியர் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகளும் பல்வேறு விதமான கோரிக்கைகளை தமிழக அரசு வைத்தனர். இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் நவம்பர் 9ம் தேதி கருத்து கேட்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 7 மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பள்ளி, கல்லூரிகள் வரும் 16ம் தேதி திறக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், பருவ மழை, கொரோனா பாதிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை தள்ளிப்போட வேண்டும் என எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. இதனால் பள்ளிகள் திறப்பை தள்ளிபோடுவதா? என்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று காலை, கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந் நிலையில், பள்ளிகள் திறப்பு தொடர்பாக வரும் 9ம் தேதி கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அன்று காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என்றும் 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் அதில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், நேரில் பங்கேற்க இயலாதவர்கள் கடிதங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.