April 14, 2021

இளவரசி, சுதாகரனின் சில சொத்துக்கள் அரசுடமை!- சென்னை கலெக்டர் ஸ்டேட்மெண்ட்

இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமாக சென்னையிலுள்ள 6 சொத்துகள் அரசுடமையாக்கப் பட்டுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சென்னையில் உள்ள 6 சொத்துகள் அரசின் சொத்து என உரிமை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நாளை சசிகலா தமிழகம் திரும்ப உள்ள நிலையில் அவரின் உறவினர்களின் சொத்துகள் அரசுடமையாக்கப் பட்டிருக்கிறது.

2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். சென்னை டிடிகே சாலையில் ஸ்ரீராம் நகரில் உள்ள ஒரு சொத்து, வாலஸ் தோட்டத்தில் உள்ள 5 சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.