March 27, 2023

தமிழக அரசின் பப்ளிக் பிராசிகியூட்டராக ஏ.நடராஜன் பொறுப்பேற்றார்!

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அரசு வக்கீல்களுக்கு தலைமை குற்றவியல் வக்கீலாக மூத்த வக்கீல் ஏ.நடராஜனை நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது வரை குற்றவியல் தலைமை வக்கீலாக கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றி வந்த எமிலியாஸ் அந்த பதவியிலிருந்து விலக்கப்படுகிறார்.

மூத்த வக்கீல் ஏ.நடராஜன் திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா, ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 1978 முதல் வக்கீலாக தொழில் செய்து வருகிறார். ஆட்டோ சங்கர் வழக்கு, தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு, எம்.கே.பாலன் வழக்கு, அயோத்தியா குப்பம் வீரமணி வழக்கு, கோல்டு குவஸ்ட் தங்க நகை மோசடி வழக்கு, டாக்டர் சுப்பையா கொலை வழக்கு, உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கு உள்ளிட்ட மிகப்பிரபலமான வழக்குகளில் ஆஜராகி வாதிட்டவர்.

கிரிமினல் வழக்குகளில் மிக அதிக நிபுணத்துவம் பெற்றவர். குறிப்பாக விசாரணை நீதிமன்றங்களில் சாட்சி விசாரணையில் தனித்துவம் பெற்றவர். தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினராக பதவி வகித்தவர். இவர்தான் இன்று தலைமை வக்கீலாக பொறுப்பேற்றார்