கொரொனாவால் இறந்தவரின் உடலை என்ன செய்ய வேண்டும்? – அரசு அறிவிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 34 பேர் உயிரிழப்பு இதுவரை 1,89,906 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 909 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 20% பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா வால் இறந்தவரின் உடலை கையாளும் முறையை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மருத்துவா்கள், செவிலியா் குழுவினா் இரவு-பகலாக போராடி வருகின்றனா். அவா்களது முயற்சியால் தொற்று நீங்கி குணமடைந்த நிலையில் பலா் வீடுதிரும்பி வருகின்றனா். தமிழகத்தில் நேற்று மட்டும் மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 10 போ உயிரிழந்துள்ளனா்.
இதை அடுத்து, கொரோனாவால் இறந்தவரின் உடலை கையாளும் முறையை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில், “கொரோனாவால் இறந்தவர்களின் உடலை பிளாஸ்டிக் பையால் சுற்றி மேல்புறத்தில் 1 சதவீதம் சோடியம் ஹைப்போ குளோரைடு கொண்டு கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
இறந்தவர்களின் உடலை கையாளும் பணியாளர்கள் சர்ஜிக்கல் மாஸ்க், கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.
இறந்தவரின் உடலை உறவினர்கள் பார்க்க விரும்பினால் முகத்தை மட்டும் காட்ட வேண்டும், பணியாளர் தவிர வேறு யாரும் இறந்தவரை தொடக்கூடாது.
இறந்தவர்களின் உடலை தொடாமல், மத சம்பந்தமான சடங்குகளை செய்ய அனுமதி, உடலை குளிப்பாட்டவோ, கட்டிப்பிடிக்கவோ, முத்தமிடவோ கூடாது.
உடலை தகனம் செய்தபின் வரும் சாம்பலை குடும்பத்தினருக்கு வழங்கலாம், அதில் ஆபத்து இல்லை, தகனத்தின்போது குறைந்த அளவிலான உறவினர்கள் சமூக விலகலோடு பங்கேற்கலாம்”இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.