10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணை முழு விபரம்!

10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணை முழு விபரம்!

நாடெங்கும் கொரோனா பரவல் மற்றும் தமிழகத்தில் 2020ஆம் ஆண்டு மார்ச்சில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள்-கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமலே இருந்தன. 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்து ஆண்டு நடைபெறவில்லை. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, 17 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளி, கல்லூர்கள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மேலும், 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் கடந்த நவம்பர் 1ஆம் தேதி திறக்கப்பட்டன. அதை அடுத்து , பொதுத்தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், 10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், ’12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை தேர்வு நடைபெறும்.ஜூன் 23ம் தேதி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மே 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறும்.11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 7ம் தேதி வெளியிடப்படும்.

10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே 6ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை தேர்வு நடைபெறும்.ஜூன் 17ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ல் தொடங்கி மே 2ல் நடைபெறும்.

10ம் வகுப்பு தேர்வை 9 லட்சம் பேரும் 11ம் வகுப்பு தேர்வை 8.49 லட்சம் பேரும் 12ம் வகுப்பு தேர்வை 8.36 லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர்.10,11,12,ம் வகுப்பு பொதுத் தேர்வை ஏறத்தாழ 26 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி அட்டவணையை http://tnschools.gov.in  & https://dge.tn.gov.in/ என்ற இணைய தளங்களில் பார்த்துக் கொள்ளலாம். மாணவர்கள் மன நிறைவோடு தேர்வை எழுத வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளிகள் ஒவ்வொன்றும் மாணவர்களுக்கான வழிகாட்டு மையங்களாக செயல்படும்.

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13ம் தேதி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும். 2022-2023 கல்வியாண்டில் 11ம் வகுப்பை தவிர பிற வகுப்புகளுக்கு ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24 முதல் பள்ளிகள் திறக்கப்படும். ‘ என்றார்.

error: Content is protected !!