May 10, 2021

மின்கட்டண மீட்டர் ரீடிங் : தமிழ்நாடு மின்வாரியம் புது அறிவிப்பு!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுதலால் கடந்த மார்ச் 24 ம்தேதி தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போதுஇந்திய அரசு ஊரடங்கினை மேலும் 2 வாரங்களுக்கு மே 4 ம்தேதி முதல் 17 ம்தேதி வரை நீட்டித்து\உத்தரவிட்டுள்ளது. தமிழ் நாட்டிலும் அதே போன்று ஊரடங்கு வரைசில வழிகாட்டுதல்களுடன் தொடரப்பட்டு வருகிறது.இதைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்படி, மின்சார துறை அமைச்சர் தங்கமணி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துடன் நடத்திய கலந்தாய்வில்வெளியிட்ட வழிமுறைகள் கீழ்வருமாறு:

முந்தைய மாத கணக்கீட்டின்படி, மின்கணக்கீடு செய்யப்பட்ட தாழ்வழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் நுகர்வோர்கள் தங்களதுமின்கட்டணத்தை முந்தைய மாத கணக்கீட்டின் படியோ அல்லது அவர்களது மின்அளவியில் உள்ள மின்நுகர்வுக்கு ஏற்ப திருத்தப்பட்ட பட்டியல் படியோ மே 22 ம்தேதி வரை மின்கட்டணம் செலுத்தலாம்.வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர்களைப் பொறுத்தவரை எங்கெல்லாம்முந்தைய மாத கணக்கீட்டு தொகையின்படி கணக்கீடு செய்யப்பட்டுள்ளதோ, அந்த நுகர்வோர்களுக்கு அடுத்த மின் அளவீடு, சம்பந்தப்பட்ட அடுத்த மின் கணக்கீடு நாளன்று எடுக்கப்படும். எனவே, அவர்களுக்கு மின் கணக்கீடு இரண்டு இருமாத மின் அளவீட்டிற்குமேற்கொள்ளப்படும்.

அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட மின் அளவீட்டிற்கான தொகையில், முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது சரி செய்யப்படும். அதற்கான மாதிரி கணக்கீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக ஒரு நுகர்வோரின் மின் அளவீடு கோவிட்-19 காரணமாக முந்தைய மாதக் கணக்கீடுபடி எடுக்கப்பட்டு பின்னர் அதைத் தொடர்ந்து அடுத்த இருமாத மின் அளவீடு அடுத்த கணக்கீடு மாதத்தில் மேற்கொள்ளப்படும்போது கீழ்வருமாறு கணக்கீடு செய்யப்படும்:

இ) 25.03.2020 முதல் 17.05.2020 வரை மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின்இணைப்பிற்கான மின்கட்டணத்தை வரும் மே 22 ம்தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின்இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.,.” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,