அனைத்து அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் 2 வாரத்தில் தடுப்பூசி போட்டுக்கோங்கோ!

அனைத்து அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் 2 வாரத்தில் தடுப்பூசி போட்டுக்கோங்கோ!

தமிழகம் முழுக்க கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அடுத்த 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் மருத்துவ நிபுணர்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய முதலமைச்சர், இந்தியாவில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தொற்று மார்ச் மாதத்தில் அதிகரிக்க தொடங்கி உள்ளதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்குமாறும், தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று ஆய்வு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் அடுத்த இரண்டு வாரத்திற்குள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், பொதுமக்களும் தங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தொழிற்சாலைகள், உணவுக்கூடங்கள், மார்க்கெட் போன்ற பகுதியிலுள்ள நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் தகுதியான அனைவரும் தடுப்பூசி செலுத்த முன்வருமாறு கேட்டுக் கொண்ட முதலமைச்சர், திரையரங்கு, சந்தை மற்றும் வணிக வளாகங்களில் பணிபுரியும் ஊழியர்களும் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் 200 காய்ச்சல் முகாம்கள் செயல்பட்டு வந்த நிலையில், அதனை 400ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 90 ஆயிரம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு குறையாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!