December 6, 2022

முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலில் கையெழுத்திட்ட 5 முக்கிய கோப்புகள்!

ராஜ்பவனின் பதவி ஏற்ற முதல்வர் கோட்டைக்கு வந்து தனக்கான இருக்கையில் அமர்ந்த மு.க. ஸ்டாலின் முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரணமாக ரூபாய் 4000 வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று மறந்த முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு மலர்த்தூவி மரியாதையை செலுத்திய பின் தயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார். இதனைத்தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று, மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை அணிவகுப்பு அளிக்கப்பட்டது.பின்னர் முதல்வர் இருக்கையில் அமர்ந்த மு.க. ஸ்டாலின் 5 முக்கிய கோப்பில் கையெழுத்திட்டர்.

அதன் விபரம் இதோ:

1. முதல் அரசாணையாக கரோனா நிவாரணமாக குடும்ப அட்டை ஒன்றுக்கு கருணாநிதி பிறந்த நாளில் ரூ.4000 என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை முதல் தவணையாக மே மாதத்திலேயே ரூ.2000 -ஐ குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கும் அரசாணை. இதன்படி 2 கோடியே, 7 லட்சத்து 66000 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.

2. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறகு அது இந்த மாதம் 16 ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.

3.மகளிர், பணிக்குச் செல்லும் பெண்கள், படிக்கும் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டம் நாளை முதல் அமல்.

4.உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற திட்டத்தின் கீழ் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்வுக்காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற திட்டத்தின் கீழ் துறை உருவாக்கப்படுகிறது. இதற்காக ஐஏஎஸ் அந்தஸ்து அதிகாரி நியமிக்கப்படுகிறார்.

5. கரோனா சிகிச்சைப்பெறுவோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றாலும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை செலவுகளை அரசே வழங்கும்.

மேற்கண்ட 5 கோப்புகளில் முதல்வர் முதல் கையெழுத்தாக இட்டுள்ளார்.