April 17, 2021

மிஸ்டர் மோடி.. எங்ககிட்டே டிஸ்கஸ் பண்ணாம ஆர்டர் போட்டது ஏன்? – எடப்பாடி ஓப்பன் லட்டர்!

“மத்திய அரசு செய்ய விரும்பும் உத்தேச சீர்திருத்தங்கள் குறித்து மாநில அரசுகளுடன் முதலில் விரிவாக விவாதம் நடத்தி இருக்க வேண்டும் அந்த விவாதத்தின் அடிப்படையில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய கோவிட் மானியம் வழங்க நிபந்தனைகளை விதிப்பது பொருத்தமாக இருக்கும். மாநில அரசுகள் கூறும் கூடுதல் கடனுக்கு நிபந்தனைகள் விதிப்பது பொருத்தமல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 293 (3) பிரிவு மாநிலங்கள் கூடுதல் கடன் வாங்க அனுமதிக்கும் அதிகாரத்தினை மத்திய அரசுக்கு தந்திருக்கிறது.அந்த அதிகாரத்தின் அடிப்படையில் மாநில அரசுகள் கூடுதல் கடன் வாங்க அனுமதிப்பதற்கு நிபந்தனைகள் விதிப்பது இதுவரை இல்லாத நடவடிக்கையாகும்” என்று நீண்ட இடைவெளிக்கு பின் மோடி அரசின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் இன்று  எழுதிய கடிதத்தில், “ஐந்து தவணைகளில் பொருளாதார மீட்பு திட்டம் வெளியிட்டதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய அரசுக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இந்த மீட்பு திட்டங்கள் இந்திய பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்க உதவும் என்று நம்புகிறேன் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கியது எதற்காகவும் ஊராட்சி ஒன்றிய அளவில் பொது சோதனை மையங்களை அமைக்க உத்தரவிட்ட அதற்காகவும் மாவட்ட மருத்துவமனைகளில் தொற்று வியாதி என தனிப்பிரிவு துவக்க உத்தரவிட்டதும் மிக முக்கியமான நடவடிக்கைகள் ஆகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பல்வேறு துறைகளில் தேவைகளுக்கும் மாநில அரசின் மிதி நிலைமைக்கும் இடையே ஒரு சமரச நிலையை உருவாக்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை தமிழக அரசு வரவேற்கிறது. மாநில அரசுகள் கூடுதல் கடன் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது இந்த அனுமதி மத்திய நிதி அமைச்சகத்தின் மே மாதம் 17ஆம் தேதி வெளியிடப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் இந்தக் கடிதத்தில் கூடுதல் கடன் வாங்குவதற்கான தேவையில்லாத மிகவும் கடினமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

மாநில அரசின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு அதிகமாக கடன் பெறுவதற்கு மாநில அரசுகள் அனுமதி கோரினர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக மாநில அரசின் வருமானம் பெரிதும் குறைந்துள்ள நிலையில் இந்த கூடுதல் கடன் அனுமதி கோரிக்கை முன்வைக்கப்பட்டது மாநில அரசுகள் எதிர்கொள்ளும் கூடுதல் செலவு ஏராளமாக உள்ளது மாநில அரசு பெரும் இந்த கூடுதல் கடன்கள் எதிர்காலத்தில் மாநில அரசு வசூலிக்கும் வரி வருமானத்தில் இருந்து செலுத்தப்பட உள்ளது மாநில அரசு பெரும் கூடுதல் இடங்கள் மத்திய அரசு வழங்கும் மானியம் அல்ல மாநில அரசு பெரும் கூடுதல் கடன்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள தேவையில்லாத நிபந்தனைகள் நியாயமற்ற வகைகள் ஆகும்.

மத்திய அரசு தன்னுடைய சீர்திருத்த கொள்கைகளை அதி தீவிரமாக அமல் செய்ய மாநில அரசுகள் மீது திணிக்கிறது வேறு வழி இல்லாத காரணத்தினால் கூடுதல் கடன் பெற மாநில அரசுகள் முயற்சிக்கும் பொழுது தேவையில்லாத நிபந்தனைகளை விதிப்பது கூட்டுறவு கூட்டமைப்பின் உணர்வுகளுக்கு பொருத்தமானதாக இராது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மத்திய அரசு செய்ய விரும்பும் உத்தேச சீர்திருத்தங்கள் குறித்து மாநில அரசுகளுடன் முதலில் விரிவாக விவாதம் நடத்தி இருக்க வேண்டும் அந்த விவாதத்தின் அடிப்படையில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய கோவிட் மானியம் வழங்க நிபந்தனைகளை விதிப்பது பொருத்தமாக இருக்கும். மாநில அரசுகள் கூறும் கூடுதல் கடனுக்கு நிபந்தனைகள் விதிப்பது பொருத்தமல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 293 (3) பிரிவு மாநிலங்கள் கூடுதல் கடன் வாங்க அனுமதிக்கும் அதிகாரத்தினை மத்திய அரசுக்கு தந்திருக்கிறது.அந்த அதிகாரத்தின் அடிப்படையில் மாநில அரசுகள் கூடுதல் கடன் வாங்க அனுமதிப்பதற்கு நிபந்தனைகள் விதிப்பது இதுவரை இல்லாத நடவடிக்கையாகும்.

மத்திய அரசு நான்கு முக்கிய துறைகளில் சீர்திருத்தப் பணிகளை துவக்கியுள்ளது.தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இந்த நான்கு முக்கிய துறைகளிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன மத்திய அரசின் நிதி உதவி எதையும் எதிர்பாராமல் இந்தத் துறையில் சீர்திருத்த நடவடிக்கைகளை தமிழக அரசு துவக்கியுள்ளது சில பகுதிகள் குறிப்பாக மின்சார விநியோக சீர்திருத்தங்கள் தொடர்பானவை தமிழகத்தில் அரசியல் முக்கியத்துவம் உடையதாக உள்ளன, இந்தச் செய்திகளை பிரதமருக்கு பலமுறை எழுதப்பட்ட கடிதங்களில் தமிழக முதல்வர் என்ற வகையில் நான் தெரிவித்திருக்கிறேன். மின்சார சட்டத்துக்கான உத்தேச திருத்தங்களின் போது இந்த செய்திகளை நான் பிரதமர் கவனத்திற்கு தெரிவித்து இருக்கிறேன் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்ற கருத்தை மாநில அரசு வலுவாக எதிர்க்கிறது

ஒரு மானியத்தை எப்படி வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கின்ற உரிமையை மாநில அரசுகளிடமே விட்டுவிட வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது இந்தப் பிரச்சனையில் இதுவரை ஒருமித்த கருத்து எதுவும் உருவாகவில்லை எனவே மின்சாரத் துறை தொடர்பான உத்தேச நிபந்தனைகளை மின்சார துறை சீர்திருத்தங்களுடன் தொடர்பு படுத்த வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு அறிவுறுத்த கேட்டுக்கொள்கிறேன் மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளை மாநில அரசுகள் அமல் செய்யும் பொழுது நீக்குப் போக்குடன் நடந்து கொள்ள அனுமதிக்க கேட்டுக்கொள்கிறேன்.

இன்றுள்ள கடுமையான நிதி நெருக்கடியின் போது மாநில அரசுகள் கூடுதல் கடன் பெற தேவையில்லாத கடுமையான நிபந்தனைகளை விதிப்பது மாநில அரசுகள் தங்களுடைய அவசியமான செலவுகளுக்கு தேவையான பணத்தை திரட்டுவதற்கான முயற்சிகளைக் கட்டுப்படுத்துவதாக அமையும். மாநில அரசுகள் எதிர்கொள்ளும் சிரமங்களை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எனவே கூடுதல் கடன் வாங்குவதற்கான வழிகாட்டு நெறிகளில் தேவையான மாற்றங்களை செய்ய உத்தரவிடுவீர்கள் என்றும் நம்புகிறேன்”