வரும் 30 ம் தேதி வரை மண்டலத்துக்குள் போக்குவரத்து தடை ! முதலமைச்சர் அறிவிப்பு!

வரும் 30 ம் தேதி வரை மண்டலத்துக்குள் போக்குவரத்து தடை !  முதலமைச்சர் அறிவிப்பு!

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாளை (வியாழக்கிழமை) 30-ஆம் தேதி வரை மாவட்டங்களுக்கிடையிலான அரசு மட்டுமின்றி கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்தும்  தடை விதிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (புதன்கிழமை) கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி கே.பழனிசாமி சொன்னது இதுதான் :

“அரசு தீவிரமாக செயல்பட்டதன் காரணத்தினால், கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். சென்னையில் மக்கள் மிகவும் நெருக்கமாக வசிப்பதால், இங்கு கொரோனா எளிதில் பரவுகிறது. வீடு வீடாகச் சென்று காய்ச்சல், தொண்டை வலி இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளடங்கிய 15 கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 6 அமைச்சர்களும் தொற்று பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

சென்னையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படுகின்றன. மேலும் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளில் அவர்களது தேவைக்கேற்ப அனைத்துப் பொருள்களும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நடமாடும் மருத்துவமனைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதனிடையே மண்டலங்களுக்கிடையிலான போக்குவரத்து காரணமாக கரோனா பரவுவதாகத் தெரிவித்தனர். இதன் காரணமாக மண்டலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு நாளை முதல் ஜூன் 30 வரை 5 நாள்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் ஈ-பாஸ் வாங்கிக்கொண்டுதான் மாவட்டங்களுக்கிடையே பயணிக்க வேண்டும். மதுரையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும்.”

 

error: Content is protected !!