திமுக கூட்டணியால் பாஜகவை வீழ வைக்க முடியுமா? – கொஞ்சம் அலசல்!
தமிழகத்தில் பிஜேபி எதிர்ப்பாளர்கள் நிறைய பேர் பிஜேபியுடன் அதிமுக கூட்டணி சேரந்ததால் அதிமுக கூட்டணிக்கு சிறு பான்மை இனமக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அதனால் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள். பிஜேபியுடம் கூட்டணி சேர்ந்தால் கூட்டணி வை க்கும் கட்சிகள் வெற்றி பெற முடியாது சிறுபா ன்மையினர் ஓட்டுக்கள் பிஜேபி கூட்டணி கட்சி க்கு கிடைக்காமல் தோல்வியை தழுவும் என்று நீண்ட காலமாக கதை கூறி வருகிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என்று பார்ப்போம்.
பிஜேபி இது வரை மூன்று லோக்சபா தேர்தல்க ளில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவோடு கூட்டணி வைத்துள்ளது. இதில் 1998 மற்றும் 2004 லோக்சபா தேர்தலில் பிஜேபி அதிமுகவோடு கூட்டணி சேர்ந்துள்ளது. 1999 ல் திமுக வோடு கூட்டணி வைத்து போட்டி யிட்டுள்ளது. இதில் 1998 ல் அதிமுக பிஜேபி கூட்டணியும் 1999 ல் திமுக பிஜேபி கூட்டணி யும் வெற்றி பெற்றுள்ளது. 2004 ல் மட்டும் அதிமுகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் திமுக தலைமையில் இணைந்த்தால் தான் அதிமுக பிஜேபி கூட்டணி தோற்றதே தவிர பிஜேபிக்கு எதிரான சிறுபான்மை இன வாக்குகளால் அல்ல.
ஏனென்றால் தமிழ்நாட்டில் 12% மட்டுமே சிறு பான்மையினர் உள்ளனர்.இதில் கிறிஸ்துவர்கள் 6.1% ஆகவும் முஸ்லிம்கள் 5.6% என்றும் மற்ற ஜைனர்கள் பௌத்தர்கள் 0.2% அளவிலும் இந்துக்கள் 88.1% ஆகவும் தமிழ்நாடு மக்கள் தொகை இருக்கிறது.
.
இந்தியாவில் இந்துக்கள் அதிகமாக வாழும் மாநிலம் என்று சதவீத அடிப்படையில் பார்த்தால் தமிழகம் 7 வது இடத்தில் இருப்பது மாதிரிதான் தோன்றும். ஆனால் மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் தமிழகம் இந்தியாவில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. அதாவது உத்தரபிரதேசம் பீகார் மத்திய பிரதேசம் மேற்கு வங்காளத்தை அடுத்து இந்தியாவில் அதிக அளவில் இந்துக்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான்.இந்துக்கள் அதிகமாக உள்ள சதவீத கணக்குப் படி தமிழகத்திற்கு பிறகு தான் பிஜேபி ஆளும் உத்தரபிரதேசம் பீகார் மகாராஸ்டிரா கோவா ஜார்கண்ட் உத்தரகாண்ட் , திரிபுரா ஹரி யானாஅஸ்ஸாம் மனிப்பூர் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்துக்கள் இருக்கி றார்கள்.
அங்கெல்லாம் மைனாரிட்டி வாக்குகளால் தடுக்கபடாத பிஜேபியின் வெற்றியை தமிழகத்தில் உள்ள மைனாரிட்டி மக்களால் மட்டும் எப்படி தடுக்க முடியும்? பிஜேபி யின் வெற்றியை தடுக்கு ம் அளவிற்கு மைனாரிட்டி மக்கள் தமிழகத்தில் ஏதாவது ஒரு மாவட்டத்தில் மெஜாரிட்டியாக இருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் இந்துக்கள் தான் மெஜாரிட்டியாக இருக்கிறார்கள்.இருந்தாலும் மைனாரிட்டி ஓட்டுக்களால் பிஜேபியோடு கூட்டணி வைக்கும் கட்சிக்கு பாதிப்பு வரும் என்று சொன்னால் அது ஒரே ஒரு மாவட்டம் தான் அது கன்னியாகுமரிமாவட்டம் தான்
.
ஏனென்றால் இங்கு தான் இந்துக்களின் ஓட்டுக்களை விட மைனாரிட்டிகளின் ஓட்டுக்கள் அதிக மாக உள்ளது.கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தொகை யில் ஹிந்துக்கள் 49% கிறிஸ்துவர்கள் 47% முஸ்லிம்கள் 4% வரை இருக்கிறார்கள்.எனவே இந்துக்களை விட மைனாரிட்டி மக்கள் அதிகளவில் வாழும் ஒரே மாவட்டம் கன்னியாகுமரி மட்டுமே. இதனால் தான் பிஜேபி இங்கு ஸ்ட்ராங்காக இருந்தாலும் முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் பிஜேபிக்குஎதிராக உள்ள வலுவான கட்சிக்கு வாக்களித்து பிஜேபியை தோற்கடித்துவிடுகிறா ர்கள்.எப்பொழுதாவது திமுக காங்கிரஸ் அதிமுக தனித்து நிற்கும் பொழுது தான் இங்கே பிஜேபி ஜெயிக்க முடியும்.அதனால் இந்த ஒரு மாவட்டம் மட்டும் தான் பிஜேபியோடு கூட் டணி சேர்கிற கட்சிக்கு கவாத்து கிடைக்கும்.
இந்துக்கள் மொத்தம் உள்ள 32 மாவட்ட ங்களி ல் 15 மாவட்டங்களில் 90% க்கும் அதிகமாக இருக்கி றார்கள்.12 மாவட்டங்களில் 80% அதிக மாக இரு க்கிறார்கள்4 மாவட்டங்களில் அதாவது தூத்து க்குடி நெல்லை ராம்நாதபுரம் நீலகிரி இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் 75-80% க்குள் இந்துக்கள் இருக்கிறார்கள்.ஆக 31 மாவட்டங்களில் இந்துக்கள் தான்மெஜாரிட்டியாக இருக்கிறார்கள். கிறிஸ்து வர்கள் நான்கு மாவட்டங்களில் மட்டும் தான் 10% க்கும் மேல் இருக்கிறார்கள் கன்னி யாகுமரி -47% தூத்துக்குடி-17% நீலகிரி- 12% திருநெல்வேலி-11% ஆகிய மூன்று மாவட்டங்களில் தான் ஓரளவுக்கு கிறிஸ்துவர்கள் இருக்கிறார்கள்.
இதே மாதிரி முஸ்லிம்கள் ராம்நாடு மாவட்டத்தில் மட்டும்தான் 15% இருக்கிறார்கள்.மற்றபடி நீல கிரி-11% வேலூர்-11% திருநெல்வேலி- 10% என்று குறைந்த அளவிலேயே இருக்கிறார்கள். இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்கள் பிஜேபி கூட்டணியில் உள்ள கட்சிக்கு நிச்சயமாக ஓட்டு போட மாட்டார்கள்.இருந்தாலும் இந்த மாவட்டங்களில் உள்ள லோக்சபா தொகுதிகளில் பிஜேபி மட்டும் பிஜேபி கூட்டணி கட்சிகள் கடந்த காலங்களில் வெற்றி பெற்றுள்ளதை அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கை யில் அதிகமாக உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாத புரம் லோக்சபா தொகுதியில் 1998 ல் பிஜே பியோடு கூட்டணி வைத்து அதிமுக வெற்றி பெற்றுள்ளது.அதே 1998 தேர்தலில் வேலூர் லோக்சபா தொகுதியில் அதிமுக பிஜேபி கூட்டணி யோடு போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது.அதே மாதிரி 1999 லோக்சபா தேர்தலிலும் இதே வேலூரில் பிஜேபி திமுக கூட்டணியோடு பாட்டாளி மக்கள் கட்சி ஞவெற்றி பெற்றுள்ளது.
நீலகிரி தொகுதியில் பிஜேபி 1998 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தும் 1999 தேர்தலில் திமுக கூட்டணி யில் இருந்தும் வெற்றி பெற்றுள்ளது.இன்னொரு முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் 1998 ல் பிஜேபி கூட்டணியில் இருந்த அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
அதே மாதிரி கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கு ம் அப்போதைய நாகர்கோவில் தொகுதியும் இப்போதைய கன்னியாகுமரி தொகுதியில் 1999 ல் பிஜேபி திமுக கூட்டணியில் இருந்த வெற்றி பெற்றுள்ளது.அதே மாதிரி கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ள இப்போதைய தூத்துக்குடி தொகுதியும் பழைய திருச்செந்தூர் தொகுதியில் 1998 ல் பிஜேபி கூட்டணி யில் இருந்த அதிமுகவும் 1999 ல் பிஜேபி கூட்டணியில் இருந்த திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.
தமிழக மக்கள் ஆதரவு இப்படி இருக்கும் பொழுது பிஜேபியோடு கூட்டணி வைத்தால் மைனா ரி ட்டி ஓட்டுகிடைக்காமல் அந்த கட்சி தோற்றுவிடும் என்று சில திருடர்கள் கதைகட்டி விட்டதால் தான் நிறைய பேர் இதை நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.இது முற்றிலும் பொய்.
1998 பாராளுமன்ற தேர்தலில் அ திமுக பிஜேபி பாமக மதிமுக கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது.அதே மாதிரி 1999 தேர் தலில் பிஜேபி பாமக மதிமுக அதே கூட்டணி அதிமுகவிற்கு பதில் திமுகவோடு சேர்ந்து 26 இடங்களை கைப்பற்றியது.எனவே பிஜேபி ஒரு வலுவான கூட்டணியில் இருக்கும் பொழுது அதன் வெற்றியையோ அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றியையோ பிஜேபிக்கு எதிராக உள்ள சிறுபான்மை இன மக்களால் தோற்கடிக்கவே முடியாது.
எனவே வருகின்ற லோக்சபா தேர்தலில் சிறுபான்மை இன மக்களின் துணை கொண்டு திமுக கூட்டணி மூலம் பிஜேபி கூட்டணியை தோற்கடித்து விடலாம் என்று பிஜேபி எதிர்ப்பாளர்கள் கனவு பகல் கனவாகவே முடியும் என்று வருகின்ற லோக்சபா தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.