கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்க தமிழக சட்டசபை ஜனவரியில் கூடுகிறது!

கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்க தமிழக சட்டசபை ஜனவரியில் கூடுகிறது!

தமிழ்நாட்டு பத்திரிகைகளுக்கு தலைப்பு செய்தி அளிக்கும் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி முதல் வாரம் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. அதற்கு மறுநாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்த பின்னர் விவாதம் நடைபெறுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூடுவது வழக்கம். அதபோல் இப்போது ஜனவரி மாதம் முதல் வாரம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இதையொட்டி பன்வாரிலால் புரோகித் உரையாற்றியதும் அதற்கு மறுநாளில் இருந்து அவர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடைபெறும். அப்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். மொத்தம் 5 நாட்கள் கூட்டம் நடைபெறும். இதில் பல்வேறு தரப்பிலான விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில், திருவாரூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் தி.மு.க. தலைவருமான மறைந்த மு. கருணா நிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்படும். திருப்பரங்குன்றம் எம்.எல். ஏ. ஏ.கே.போஸ் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படும்.

இதனிடையே ராமசாமி படையாட்சியார் உருவப்படம் சட்டசபையில் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி பேரவை கூட்டத் தொடரின் போது ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!