Categories: தமிழகம்

கலைவாணர் அரங்கில் கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் 3 நாட்கள் நிகழ்ச்சி நிரல்!

கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்போதைய கூட்டத்தொடர் சென்னை வாலாஜா சாலையில் கலைவாணர் அரங்கில் மூன்றாம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் நடத்தப்படும் என்று சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் முன்னதாக தெரிவித்திருந்தார். சட்டப்பேரவைக் கூட்டுவதற்கான ஒப்புதலை மாநில ஆளுநர் பன்வாரிலால் செப்டமபர் 1ம் தேதி அளித்தார்.

சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் மாற்றியமைக்கப்பட்டது. சபாநாயகர், முதல்-அமைச்சர், அரசு தலைமை கொறடா, எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சிகள் ஆகியோருக்கும் அலுவலக வசதிகளை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் வரும் 14-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது என்று தமிழக அரசு அறிவித்தது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சி நிரல் வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையின் படி, 14.9.2020 திங்கட்கிழமை அன்று இரங்கல் குறிப்புகள் நடைபெறுகிறது .

இரங்கல் குறிப்புகள் :

சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து நடைபெறும்.

இரங்கல் தீர்மானங்கள் :

1.திரு. பிரணாப் முகர்ஜி, இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அவர்கள் மறைவு குறித்து நடைபெறவுள்ளது.

2.திரு. ஜெ. அன்பழகன் சட்டமன்றப் பேரவை உறுப்பினர் அவர்கள் மறைவு குறித்து

3. திரு. எச். வசந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர் அவர்கள் மறைவு குறித்து

4.கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்து அரசினர் அலுவல்கள்.

15.9.2020 அன்று அரசினர் அலுவல்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

16.9.2020 அன்று :

(1) 2020-2021-ஆம் ஆண்டிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளித்தல்.

(2) 2020-2021-ஆம் ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு (விவாதமின்றி)

(3) 2020-2021-ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு அறிமுகம் செய்தல் மற்றும் ஆய்வு செய்து நிறைவேற்றுதல் (விவாதமின்றி)

(4) சட்டமுன்வடிவு கள் ஆய்வு செய்தலும், நிறைவேற்றதலும்

(5) ஏனைய அரசினர் அலுவல்கள் பேரவை வழக்கம்போல் காலை 10.00 மணிக்குக் கூடும் என் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aanthai

Recent Posts

தூதரகங்களுக்கு வந்த விலங்குகளின் கண்கள் பார்சல் – உக்ரைன் அதிர்ச்சி!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 10 மாதங்களை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா…

1 hour ago

டிஎஸ்பி.- விமர்சனம்

ஐந்து வருடங்களுக்கு முன்னால் -அதாவது 2017இல் நல்ல ஸ்கிரிப்டுடன் வந்த விக்ரம் வேதாவுக்கு பிறகு ஏனோதானொவென்று திரையில் தோன்றும் போக்கு…

4 hours ago

“வரலாறு முக்கியம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்புத் துளிகள்!

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு…

8 hours ago

பிராமண உயிர் அற்பமானதா என்ன ?!

முந்தாநாள் தில்லியின் ஜேஎன்யூ பல்கலைக் கழக வளாகத்தில் சில சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள் காணப்பட்டன. 'பிராமணர்களே இந்தியாவை விட்டு…

9 hours ago

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையைச் சொல்லும் “விட்னஸ்”!

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி…

12 hours ago

10 மாதங்களாக தொடரும் எரி பொருள் கொள்ளை – கார்கே குற்றச்சாட்டு!

நம் நாட்டில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்ததில் இருந்தே அன்றாடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.…

1 day ago

This website uses cookies.