November 28, 2021

ஜூன் 2 வது வாரத்தில் தமிழக சட்டசபை கூடும்?

தமிழக சட்டப்பேரவையின் பட் ஜெட் கூட்டத் தொடர், கடந்த மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. அன்று, 2017-18ம் நிதியாண்டுக்கான பட் ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக் குமார், பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீது 4 நாட்கள் விவாதம் நடந்தது. மார்ச் 24-ம் தேதி வரை நடந்த கூட்டத்தொடரில் 2017-18ம் நிதியாண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையும், 2016-17ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.வழக்கமாக, பட்ஜெட் மீதான விவாதம் முடிந்ததும் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றின் மீது விவாதம் நடத்தப்படும். அதில், அந்தந்தத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு வாக்கெடுப்பு நடத்தி ஒப்புதல் பெறப்படும். தேர்தல் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகள் இருந்தால் மட்டுமே மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தள்ளிவைக்கப்படும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை கருத்தில்கொண்டு இந்த ஆண்டு பட்ஜெட் விவாதத்துடன் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் தள்ளிவைக்கப்பட்டது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக் குப் பின்னர் சட்டப்பேரவை கூட்டப் படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணப் பட்டுவாடா புகாரால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு ஒரு மாதத்துக்குமேல் ஆகிவிட்ட நிலையில் சட்டப்பேரவை இன்னும் கூட்டப்படாமல் இருக்கிறது. அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்கள், உட்கட்சிப் பூசல் போன்ற காரணங் களால் பேரவை கூட்டப்படாமல் தள்ளிப்போனது.

இதற்கிடையே, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி பேரவைத் தலைவர் ப.தனபாலிடம் நேரில் வலியுறுத்தினார். பின்னர் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் பேரவைத் தலைவரிடம் இதே கோரிக்கையை முன்வைத்தனர். அதன்பிறகும் பேரவை கூட்டப்படவில்லை.

இதையடுத்து பேரவையை உடனடியாக கூட்ட பேரவைத் தலை வருக்கும் முதல்வருக்கும் உத்தர விட வேண்டும் என்று ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதமும் எழுதி னார். ஆனால், சட்டப்பேரவை கூட்டப்படாமல் கடந்த 11-ம் தேதி கூட்டத்தொடரை இறுதி செய்து ஆணை வெளியிடப்பட்டது. இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்தது.

தமிழகத்தில் கடும் வறட்சி, குடிநீர் கட்டுப்பாடு, டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான பெண்களின் தொடர் போராட்டம், விவசாயிகள் தற்கொலை, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு பிரச்சினை உள்ளிட்ட பல் வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியிருப்ப தால் சட்டப்பேரவையை உடனடி யாக கூட்ட வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவை ஜூன் 3-ம் தேதி அவரது பிறந்த நாளில் கொண்டாட ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது. அன்றைய தினம் சட்டப்பேரவை கூட்டம் நடந்தால் திமுக உறுப்பினர்கள் கருணா நிதியை புகழ்ந்து பாராட்டி பேசி, அது அவையில் பதிவாகும் என்ப தால் அதைத் தவிர்க்கும் நோக்கில் சட்டப்பேரவை கூட்டப்படாமல் இருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அவரது குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள முதல்வர் கே. பழனிசாமி, சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘தமிழ்நாடு மாநில ஜிஎஸ்டி மசோதா, வரும் ஜூன் மாதம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப் படும்’’ என தெரிவித்தார். அதனால், ஜூனில் பேரவை கூடும் என்று உறுதியானது.

இதுகுறித்து சட்டப்பேரவை செயலக வட்டாரத்தில் விசாரித்த போது, “துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி, வாக்கெடுப்பு நடத்த வேண் டும். அப்போதுதான் ஒவ்வொரு துறைக்கும் உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும். அநேகமாக ஜூன் 2-வது வாரத்தில் பேரவைக் கூட அதிக வாய்ப்புள்ளது. இதுதொடர் பாக விரைவில் அறிவிப்பு வெளி யாகும்’’ என்று தெரிவித்தனர்.

சட்டப்பேரவை கூட்டம் தொடங்க உள்ளதையடுத்து தற்போது அனைத்து துறைகளிலும் மானியக் கோரிக்கைகளுக்கான கொள்கை விளக்க குறிப்புகளை தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடை பெற்று வருகிறது. ஜூனில் தொடங்கும் கூட்டத்தொடர் ஒரு மாதம் நடைபெறும் என எதிர்பார்க் கப்படுகிறது.

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் உள் ளாட்சிகளில் எஸ்சி, எஸ்டி வகுப்பின ருக்கான இடஒதுக்கீட்டு மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோ தாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது. அதே நேரத் தில் பேரவை கூட் டப்பட்டால் குடிநீர் தட்டுப்பாடு உள் ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பவும் திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் திட்ட மிட்டு வருகின்றன.