புலிகள் புதைத்து வைத்த தங்கத்தைத் தேடும் வேட்டை – இலங்கை போலீஸ் நடத்துகிறது

புலிகள் புதைத்து வைத்த தங்கத்தைத் தேடும் வேட்டை – இலங்கை போலீஸ் நடத்துகிறது

லங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் இறுதிப் போருக்கு முன்னதாக தாங்கள் வைத்திருந்த தங்கத்தை தண்ணீர் தேங்கி உள்ள சிறு குட்டை ஒன்றில் புதைத்து வைத்ததாக கூறப்படுகிறது. அந்த சிறிய தண்ணீர் குட்டையில் தங்கத்தை தேடும் வேட்டை வியாழக் கிழமையன்று துவங்கியது.

முல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் புதுக்குடியிருப்பில் ஒரு தென்னந்தோப்பு ஒன்றில் அந்த சிறு குளம் இருப்பது தெரியவந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மாஜிஸ்திரேட் முன்னிலையில் முல்லைத்தீவு போலீசாரும் சிறப்பு அதிரடிப்படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு கிராமத்தில் தங்கம் புதைத்து வைக்கப்பட்டு உள்ளது என்பதை போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் உறுதி செய்ததாக கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த தங்கத்தைத் தேடி இலங்கை அமைச்சரவையில் உள்ள 2 அமைச்சகங்களின் செயலாளர்கள் கூட்டுச் சேர்ந்து தேடி வந்தார்கள். இந்தத் தகவல் இலங்கை இரகசிய போலீசாருக்கு தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட ரகசியப் போலீசார் தங்கத்தை தேடும் பணியில் முடுக்கி விடப்பட்டனர். ரகசிய போலீசாரின் புலன்விசாரணை காரணமாக புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள போலீசாருக்கு விடுதலைப்புலிகள் தங்கத்தை புதைத்து வைத்த இடம் குறித்து துப்பு கிடைத்தது.

அதைத்தொடர்ந்து தேடுதல் வேட்டை துவக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் இப்பொழுது மழை பெய்வதால் மழை ஓய்ந்ததும் முழு வீச்சில் தங்கவேட்டையை தொடங்க போலீசார் தீர்மானித்துள்ளனர்.

error: Content is protected !!