21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிபட்டது!- வீடியோ!

21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி  பிடிபட்டது!- வீடியோ!

டந்த 21 நாட்களாக மசினகுடி வனப்பகுதியில் தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிபட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் புலி தாக்கி உயிரிழந்தனர். இதனையடுத்து, 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும் புலி கொன்றது. இதனையடுத்து, பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டது. ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக புலியை மயக்க ஊசி செலுத்தி உயிரோடு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. T23 புலி என அடையாளம் காணப்பட்ட அந்த புலியை பிடிக்கும் பணியில் மோப்பநாய்களும், கும்கி யானைகளும் ஈடுபடுத்தப்பட்டன.

மேலும், மசினகுடி வனப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்ட வனத்துறையினர் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர். எனினும் புலி தப்பியோடியது. மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் புலி சோர்வாக காணப்படும் என்பதால் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட வனத்துறையினர் தற்போது புலியை பிடித்துள்ளனர்.

புலிக்கு உடலில் சில இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அந்த புலி வண்டலூர் பூங்காவில் விடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!