April 13, 2021

மெஹ்பூபா முஃப்தி பேச்சு சரியில்லை: கட்சியிலிருந்து மூவர் ராஜினாமா!

தேசபக்தி உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மெஹ்பூபா முஃப்தி பேசியதாக கூறி மக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து (PDP) 3 தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

PDP தலைவர்கள் டி.எஸ்.பஜ்வா, வேத் மஹாஜன் மற்றும் ஹுசைன் வஃபா ஆகியோர் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்திக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் தேசபக்தி உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மெஹபூபா பேசியுள்ளது சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்த பின்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள அரசியல் தலைவர்கள் பலரை வீட்டு சிறையில் வைத்தது. அதில் ஒருவரான மெஹ்பூபா முஃப்தி 14 மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் விடுதலையானார்.

பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் மீடியாக்களிடம் பேசிய போது, ‘என் கொடி இதுதான் (மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் கொடியைக் காட்டி). இந்தக் கொடி மீண்டும் கொண்டு வரப்பட்டால், மூவர்ணக் கொடியை ஏற்றுவோம். எங்கள் கொடியை மீண்டும் கொண்டு வராமல் வேறு எந்த கொடியையும் உயர்த்தப் போவதில்லை. இந்தக் கொடிதான் மூவர்ணக்கொடியுடனான உறவை வளர்த்தெடுத்தது. இந்த நாட்டின் மூவர்ணக்கொடியுடனான எங்கள் உறவு ஜம்மு காஷ்மீர் கொடியைத் தவிர்த்துக் கிடையாது. இந்தக் கொடி எங்கள் கைக்கு கிடைக்கும் போது அந்தக் கொடியையும் உயர்த்துவோம்”என கூறியிருந்தார்.

மெஹ்பூபாவின் இந்த பேச்சுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்புகள் கிளம்பியிருந்த நிலையில் தான்  PDP தலைவர்கள் டி.எஸ்.பஜ்வா, வேத் மஹாஜன் மற்றும் ஹுசைன் வஃபா ஆகியோர் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்திக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் தேசபக்தி உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மெஹபூபா பேசியுள்ளது சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக  தெரிவித்துள்ளார்களாக்கும்