September 29, 2021

அமெரிக்கா ஒரு செகண்ட் அட்வான்ஸ்ஸா போகுது!

2016-ம் ஆண்டில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்‍க சர்வதேச நேரத்தை கணக்‍கிட்டு வரும் அமெரிக்‍க கடற்படை வான்வெளி ஆய்வு அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

clock

தொடக்‍கத்தில் பூமியின் சுழற்சியை அடிப்படையாகக்‍ கொண்டு, நேரம் கணக்‍கிடப்பட்டும் வந்தது. ஆனால், அதிநவீன அணுவியல் கடிகாரங்கள் கண்டுபிடிக்‍கப்பட்ட பின்னர், பூமியின் சுழற்சியை சாராமல் நேரம் மிகத் துல்லியமாக கணக்‍கிடப்பட்டு வருகிறது.ஆனால், அணுவியல் கடிகாரத்தின் நேரத்தைவிட பூமி நாள்தோறும் ஒன்று புள்ளி ஐந்து முதல் இரண்டு மில்லி விநாடிகள் மெதுவாக சுழல்கிறது. இதன் காரணமாக, 500 முதல் 750 நாள் கால அளவில் பூமி சுழற்சியின் அடிப்படையிலான நேரத்திற்கும், துல்லியமான அணுவியல் கடிகாரத்தின் நேரத்திற்கும், ஒரு விநாடி வேறுபாடு காணப்படுவதாக அமெரிக்‍க கடற்படை வான்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்தது. இந்த வேறுபாட்டை அவ்வப்போது சரி செய்வதற்காக, கடந்த 1970-ம் ஆண்டு சர்வதேச ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி, சர்வதேச நேரத்தை கணக்‍கிட்டு பராமரித்து வரும் அமெரிக்‍க கடற்படை வான்வெளி ஆய்வு மையம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி நள்ளிரவு 11 மணி 59 நிமிடம், 59-வது விநாடிக்‍குப் பிறகு கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்‍க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, 11 மணி 59 நிமிடம் 59-வது விநாடிக்‍குப் பிறகு மீண்டும் அதே நிமிடம் கணக்‍கிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.