December 7, 2021

விந்தணுக்களின் எண்ணிக்கை கணக்கிடும் மொபைல் ஆப்!

பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தியானது இருப்பதில்லை. விந்தணுவின் உற்பத்தியைப் பொறுத்தே கரு உருவாதல் அடங்கி இருக்கிறது. கரு உருவதலில் ஆண், பெண் என இருவருக்கும் சமபங்கு இருக்கிறது. ஆண்களுக்கு விந்தணு வின் எண்ணிக்கையே பொறுத்து தான், அவர்கள் மலட்டுத்தன்மை உள்ளவரா அல்லது கரு உருவக்க கூடியவரா என்பதை தீர்மானிக்கி றது. ஆனால் மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற பல்வேறு காரண ங்களால் விந்தணு உற்பத்தி மற்றும் எண்ணிக்கை பாதிக்கப்படலாம். இந்நிலையில் ஸ்மார்ட் போன்களில் பொறுத்தப்பட்டிருக்கும் ஒரு கருவி மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கையை கணக்கிடும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

sperm mar 27

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தினால் , தற்போது எல்லா வசதிகளும் ஸ்மார்ட் போனுக்குள் அடங்கிவிட்டன. சமீபத்தில் கூட இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஸ்மார்ட் போன் அப்ளிகேசன் மூலம் அறிந்து கொள்ளும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அடுத்த முயற்சியாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து, ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கையை கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். இதன்படி விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டுள்ள சிறிய சிப்பில் விந்தணு துளி ஒன்றை வைத்து, அதனை ஸ்மார்ட் போனோடு பொருத்தி விட வேண்டும். பின்னர் இதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் மொபைல் அப்ளிகேசனை திறக்க வேண்டும்.

அப்ளிகேசனை திறந்தவுடன் ஸ்மார்ட் போனில் உள்ள கேமிராவானது செயல்பட்டு, விந்தணு துகளை ஒரு விநாடி வீடியோவாக படமெடுத்து, அந்த அப்ளிகேசனுக்கு அனுப்பும். அந்த அப்ளிகேசன், அந்த வீடியோவில் விந்தணுக்களின் நகர்வை ஆராய்ந்து அதன் எண்ணிக்கையை கணக்கிட்டு சொல்லும். இந்த புதிய தொழில்நுட்பத்தின் முதல் கட்ட சோதனை வெற்றியடைந்துள்ளது. இதனை வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்த தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த கருவி விற்பனைக்கு வரும் போது இதன் விலை 350 ரூபாயாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.