இந்த ‘கொலை’ படம் உலக தரமிக்க படமாக இருக்கும்!- விஜய் ஆண்டனி நம்பிக்கை!

இந்த ‘கொலை’ படம் உலக தரமிக்க படமாக இருக்கும்!- விஜய் ஆண்டனி நம்பிக்கை!

லைலாவை கொன்றது யார் எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. கொலை படம் குறித்து பரவும் இந்த செய்தி திரைப்பட ஆர்வம் இல்லா பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க, பாலாஜி K குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘கொலை’. வித்தியாசமான மோஷன் போஸ்டர் அறிமுகத்தால் ரசிகர்களின் ஆவலை தூண்டிய இந்த திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியது..,

“இந்த படம் உருவாக முழு காரணம் விஜய் ஆண்டனிதான். இயக்குனர் பாலாஜி மிகவும் திறமையான நபர், அவருக்கு பல நுட்பங்கள் தெரியும். அவருடன் பணிபுரிந்தது பெரிய மகிழ்ச்சி. இயக்குநர் இந்த திரைப்படத்தை நேர்த்தியாக செதுக்கியுள்ளார். படத்தின் முடிவு எப்படி வரும் என்பதை ரகசியமாய் வைத்து, சிறப்பாக உருவாக்கி கொண்டு இருக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவும், படத் தொகுப்பும் பாராட்டபடும். இந்த படம் இயக்குநர் மிஷ்கினுக்கு ஒரு டிரிபுயூட்டாக இருக்கும். படக்குழுவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்”

ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன் பேசியது..,

“இந்த படத்தில் நான் பணிபுரிந்தது எனக்கு பெரிய அனுபவமாக இருந்தது. இந்த படத்தை கொரோனா காலத்தில் நம்பிக்கை வைத்து துவங்கினார்கள். இந்த படத்தின் கதை புது மாதிரியாக இருக்கும். முதல்முறை பார்க்கும் போது ஒருவிதமாகவும், இரண்டாவது முறை பார்க்கும் போது வேறு அனுபவமாக இருக்கும். இந்த படத்தில் என்னுடன் பயணித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், என் உதவியாளர்களும் இந்த நேரத்தில் நன்றி கூறிகொள்கிறேன்”

இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பேசியது..,

“இயக்குநர் உடயை இந்த ஸ்கிரிப்டை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் படத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவருக்கு திரைப்படங்கள் தான் எல்லாமே. இந்த படத்தின் இசையில் ஒரு புதுவித ஒலியை இசையை கொடுக்க முயற்சித்து இருக்கிறோம். இந்த படத்தின் ரீ ரெக்கார்டிங்க் 6 மாத காலம் எடுத்துகொண்டது. இந்த படத்தின் தயாரிப்பாளரின் உதவியில்லாமல், இந்த படம் இவ்வளவு தூரம் வந்திருக்காது. எல்லோருக்கும் நன்றி”.

நாயகி மீனாட்சி சௌத்ரி பேசியது..,

“இந்த படம் ஒரு பெரிய பயணம், இந்த படம் எனது முதல் தமிழ்படம். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்த படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் கிடைத்ததே எனக்கு பெரிய மகிழ்ச்சியான விஷயம். இந்த படத்தின் வெளியீட்டிற்காக நான் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறேன்”

நாயகி ரித்திகா சிங் பேசியது..,

“இந்த படத்தின் கதையை கேட்டபோதே, நான் கதைக்குள் ஆழமாக போய்விட்டேன். கதையின் முடிவை தெரிந்துகொள்ள நானும் விரும்பினேன். இந்த படத்தில் பலர் நடித்துள்ளனர். அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர், அனைவருக்கும் முக்கியமான கதாபாத்திரமாக் இருக்கும். இப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும்”.

இயக்குநர் பாலாஜி குமார் பேசியது..,

“இந்த தருணத்திற்காக நாங்கள் பல வருடம் காத்திருந்தோம். இந்த படம் உருவாக மிக முக்கியமான காரணம் விஜய் ரத்தினமும், விஜய் ஆண்டனியும் தான். இந்த கதையை விஜய் ஆண்டனியிடம் நான் கூறியபோது, அவர் கதைக்குள் மூழ்கி விட்டார். அவருக்கு நான் நன்றி கூறிகொள்கிறேன். அவர் ஒப்புக்கொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. தயாரிப்பாளர் சித்தார்த்திற்கு நன்றி கூற வேண்டும், இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தான் இந்த படம் இவ்வளவு தூரம் உருவாக காரணம். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தின் பலம். அவர்கள் இந்த படம் நன்றாய் வருவதற்கு கண்மூடித்தனமான நம்பிக்கையுடன் உழைத்தார்கள். நடிகர்களின் ஒத்துழைப்பு இல்லாமல், இந்த படம் சிறப்பாக வந்திருக்காது. அனைவரும் ரசிக்கும்படியான இரண்டாவது தடவை பார்க்கும் படியான படைப்பாக இது இருக்கும்”.

இயக்குநர் மிலிந்த் ராவ் பேசியது..,

“இந்த படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தின் நடிகர்கள் எல்லாம் திறமையானவர்கள். படக்குழ்விற்கு எனது வாழ்த்துகளை கூறிகொள்கிறேன்.”

இயக்குனர் மிஷ்கின் பேசியது..

“இயக்குனர் பாலாஜி, சினிமாவின் நுணுக்கங்கள் தெரிந்த ஒரு தொழில்நுட்ப கலைஞர். அவர் சினிமாவை படிப்பாக கற்றுகொண்டவர். கொலை மனிதர்களுடன் எப்போதும் நெருக்கமான ஒன்று. இந்த படத்தின் டிரைலர் பார்ப்பதற்கு ஈர்க்கும் வகையில் இருக்கிறது. படத்தின் இசை ரசிக்கும் படி இருக்கிறது. படக்குழுவிற்கு எனது நன்றிகள்.”

தயாரிப்பாளர் கமல் போரா பேசியது..

“இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் ஒரு வருட காலம் நடந்தது. நானும் இயக்குநரும் பெரிய விவாதத்திற்கு பிறகு, நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம். படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் நன்றி”.

நடிகர் விஜய் ஆண்டனி பேசியது..,

“இந்த படத்தில் இணைந்திருப்பதே பெருமையான விஷயம். இந்த படம் இயக்குனர் பாலாஜியின் கனவு. நான் உறுதியாக தன்னம்பிக்கையுடன் கூறுகிறேன், இந்த படம் உலகதரமிக்க சிறந்த படமாக இருக்கும். இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரங்கள். அவர்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. இவர்களுடன் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சிவக்குமார், இந்த படத்தின் மீதும், இயக்குநர் மீதும் மிகுந்த நம்பிக்கையும் பற்றும் கொண்டு இருக்கிறார். ஒரு இசையமைப்பாளராக, இந்த படத்தின் இசையமைப்பாளர் உடைய பணி எனக்கு உலகதரமாக தெரிகிறது. படதொகுப்பாளர் இந்த படத்தின் கதையை புரிந்து, அதை தொகுத்துள்ளார். இந்த படத்தில் CG கலைஞர் ரமேஷ் ஆச்சார்யா பெரிய பணியை செய்துள்ளார். அது பேசப்படும். ரித்திகா, மீனாட்சியுடன் பணிபுரிந்தது பெரிய சந்தோசம். இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும் நன்றி”

error: Content is protected !!