October 19, 2021

உங்க ஏ டி எம் -பின் நம்பரை மாத்தியாச்சா?

 நம்ம நாட்டுலே உள்ள ரொம்ப பெரிய பேங்கான எஸ்.பி.ஐ, வங்கியின் ஏடிஎம் சேவையை பயன்படுத்தி கொள்ளை நடைபெற வாய்ப்புள்ளதால், குறிப்பிட்ட சில ATM கார்டுகளை முடக்கியுள்ளதாகவும் ஈபிடி டெபிட் கார்டு தடை செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் உடனடியாக, அருகாமையில் உள்ள எஸ்பிஐ அலுவலகம் அல்லது இலவச டோல் ஃப்ரீ அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு, தங்களுக்கான புதிய டெபிட் கார்டை விண்ணப்பித்து, பெற்றுக்கொள்ளலாம் என எஸ்பி ஐ தெரிவிச்சது பத்தி   முன்னரே  சொல்லியிருந்தோம்..

atm oct 20

இதுக்கிடையிலே கிட்டத்தட்ட 32 லட்சம் இந்தியர்களின் டெபிட் கார்டுகளை மாத்தியோ அல்லது அதன் பின் நம்பரை மாத்த சொல்லவோ பேங்க் முடிவெடுத்திருக்காம். இதுக்கு மெயின் ரீசன் என்னான்னா சீனாவில் அங்கீகாரமற்ற முறையில் இந்த எண்கள் பயன்படுத்தப்பட்டு கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படுகிற‌து என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. இந்த பரிமாற்றங்கள் சீனாவில் ஏ.டி.எம், பொருட்களை பர்சேஸ் செய்யும் இடம் போன்ற இடங்களில் பதிவாகியிருக்காம்..

அதாவது கஸ்டமர்களோட தகவல்கள் திருடப்பட்டு அதே டைபிலான கார்டுகள் க்ளோனிங் செய்யப்பட்டு இந்த கோல்மால் செய்ய பயன்படுத்தப்படுது. மொத்தமுள்ள 32 லட்சம் கார்டுகளில் 26 லட்சம் கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டு வகைகளை சேர்ந்தது என்றும், மீதமுள்ள 6 லட்சம் கார்டுகள் ரூ-பே கார்டுகள்-ன்னும் கூறப்படுது. இதிலே பெரும்பாலான கார்டுகள் எஸ்.பி.ஐ மற்றும் ஹெச்.டி.எஃப்.சி ஏ டி எம் கார்டுகளாகம்.

அது சரி நான் மட்டும் யூச் பண்ற கார்ட் தகவல்கள் எப்படிப்பா திருடறாங்க?ன்னு கேக்கறவங்களுக்கு இதோ விளக்கம்:

1. பர்சேஸ் செய்ய ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தும் இடத்தில் ”ஸ்கிம்மர்கள்” எனும் கருவி ஸ்வைப் செய்யும் கருவியுடன் இணைக்கப்பட்டு மொத்த தகவலும் எடுக்கப்படலாம்.

2. ஏ.டி.எம் நிலையங்களிலேயே ஸ்கிம்மர்கள் பொருத்தப்பட்டு அனுமதியற்ற முறையில் தகவல்கள் திருடப்படலாம்.

3. போலியான இணையதளங்களில் பணப்பரிவர்த்தனை செய்வது முறையற்ற முறையில் ஸ்க்ரீன் கேப்சர் செய்யப்படுவது.

4. அதிகாரபூர்வமற்ற வங்கி ஆப்ஸ்கள் மூலமாகவும் தகவல்கள் திருடப்படுகிறது.

இப்படியெல்லாம் திரட்டப்படும் தகவல்கள் குறிப்பிட்ட பெரிய தொகைக்கு விற்கப்படுகிறது. இப்படித் தான் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு பணம் திருடுபோகிறது.

அப்படின்னா என்ன செய்யணும்-னு கேக்கறீங்களா?

1. உங்க பேங்கின் வெப்சைட்டை நீங்களே டைப் செய்து செல்லுங்கள். இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்-ல் வரும் லிங்குகளை க்ளிக் செய்யாதீர்கள்.

2. வங்கியோட அபீசியல் ஆப்ஸை மட்டுமே பயன்படுத்துங்கள்.

3. பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் இங்கெல்லாம் டெபிட் கார்டை பயன்படுத்தும்போது அந்த கருவிகளில் வித்தியாசமாக ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள்.

4. ஆன்லைன் ஆர்டர்களை கூடியமட்டில் கேஷ் ஆன் டெலிவரியாக செய்யுங்க

5. ப்ரெளசிங் சென்டர்களில் பணப்பரிவர்த்தனை செய்வதை தவிருங்கள்.

இதுக்கிடைய்லே எஸ்.பி,ஐ கிட்டத்தட்ட 6 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இந்த விஷயம் தொடர்பாக புதிய கார்டுகளை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறுகிறது. அதுனாலே வங்கிகள் எண்களை மாற்ற சொல்கிறது என்பதை வழக்கமான விஷயமா நெனக்காம அதனைக் கொஞ்சம் சீரியசாக எடுத்துக்குங்க. இப்படி அடிக்கடி பின் நம்பரை மாற்றுவது நினைவில் வைத்துக் கொள்ள கடினமாக தான் இருக்கும் ஆனால் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றிடுங்க அப்ப்டீனு வங்கிகள் வலியுறுத்துது.

ஹூ,, உங்க கார்ட் இந்த 32 லட்சம் எண்களில் இருக்குது? இல்லையோ? உங்கள் சேஃப்டிக்காக உங்க ஏ.டி.எம் பின் நம்பரை உடனடியாக மாத்தி போடுங்களேன்!