October 27, 2021

திருப்பதி கோயில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லையாம்!

உலகளவில் உள்ள இந்து கோயிகளில் அதிக வருமானம் உடைய வசதியான கோயிலாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயில்தான். இங்கு குறைந்தது தினசரி 90 ஆயிரம் பக்தர்கள் வந்து சென்றதால் உண்டியல் காணிக்கை, விடுதிக் கட்டணம் என பல வழிகளில் வருவாய் கிடைத்தது . . இதனால் ஆண்டுக்கு ஆண்டு ஏழுமலையான் சொத்து உயர்ந்து கொண்டே செல்கிறது . இத்தனைக்கும் 1958-ம் ஆண்டு நவம்பர் 28ம்தேதிதான் ஒரு நாள் உண்டியல் வருமானம் ரூ.1 லட்சத்தை தாண்டியது. பெரிய சாதனையாக கருதப்பட்டது. அதுவும் ஒரே பக்தர் ரூ.1 லட்சம் கரன்சி நோட்டுகளை கட்டு கட்டாக உண்டியலில் போட்டதால் இந்த சாதனை ஏற்பட்டது. அதன் பின் அது போன்ற நிகழ்வு சாதாரணமாகி 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது . இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் . ஒரே நாளில் 10 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர் .

இந்துக்கோயில் பாரம்பரியத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்குவது ஒரு முக்கிய கடமையாக இருக்கிறது. திருப்பதிக்கு தினமும் உலகெங்கிலுமிருந்து லட்ச லட்சக்கணக் மக்கள் வந்தாலும் அவர்கள் அனைவரும் எந்நேரமும் இலவச உணவருந்து வதற்கு பேருதவியாக இருப்பது திருப்பதி கோயில் உண்டியலில் பக்தர்கள் பணமாக போடுகின்ற காணிக்கை மற்றும் அவர்கள் கோவிலுக்கு கொடுக்கின்ற நன்கொடைகள் தான். இதற்காக தனியாக அன்னதான டிரஸ்ட் அமைக்கப்பட்டு உள்ளது . இந்த நித்ய அன்னதான டிரஸ்டுக்கு 2015 ஏப்ரல் மாதம் வரை ரூ .591 கோடி நன்கொடையாக வந்து உள்ளது . . மேலும் தினந்தோறும் டிரஸ்டுகளுக்கு நன்கொடை வந்த வண்ணம் உள்ளது . இதன் மூலம் ஆண்டுக்கு ரூ .100 கோடிக்கு மேல் வசூலாகிறது .

இந் நிலையில் 40 நாட்கள் ஊரடங்கால் திருப்பதி கோயிலுக்கு ரூ.400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்டதாக திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் சுமார் 120 கோடி ரூபாய் வரை மாத சம்பளமாக ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஊழியர்களுக்கு சம்பளமும், ஓய்வூதியமும் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் செய்தியாளர்களிடம், “ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அத்தியாவசிய செலவுகளை செய்ய இதுவரை ரூபாய் 300 கோடி வரை செலவு செய்துள்ளோம். தேவஸ்தான பணிகளுக்காக ஆண்டுதோறும் ரூ. 2,500 கோடி வரை செலவாகி வருகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கொடுப்பதற்காக மட்டும் மாதம் ரூ. 120 கோடி தேவைப்படுகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சுகாதார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ரூ.400 கோடி மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

2020-21ம் ஆண்டில் தேவஸ்தானம் சார்பில் நடந்து வரும் நற்காரியங்களுக்காக ரூ.1385.90 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் ஊரடங்கு காரணமாக ரூபாய் 400 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் தினசரி செலவுகளை மேற்கொள்வதற்கு போதிய பணம் இல்லை.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான 8 டன் தங்கம் மற்றும் நிலையான வைப்பு நிதியாக வங்கிகளில் இருக்கும் ரூபாய் 14,000 கோடி ஆகியவற்றை எடுக்காமல் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.