3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது!

17-ஆவது மக்களவைத் தேர்தலின் 3-ஆம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது கிடைத்த நிலவரப்படி  64.66 வாக்குகள் பதிவாகியுள்ளது.

நம் நாட்டில் பார்லிமெண்ட் தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத்தில் 91 தொகுதி களுக்கு நடந்த தேர்தலில், 69.43 சதவீத ஓட்டுப் பதிவானது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில், 95 தொகுதிகளில், 67.6சதவீத ஓட்டுகள் பதிவாயின. அந்த வரிசையில் குஜராத், கேரளா உள்பட, 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 116 தொகுதி களுக்கு, நேற்று, ஓட்டுப் பதிவு நடந்தது. ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் தொகுதிக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நேற்று முதல் கட்ட ஓட்டுப் பதிவு நடந்தது. விறுவிறுப்பாக நடந்த,3-ம் கட்டத் தேர்தலில் 64.66 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அனந்த் நாத் தொகுதியில், 13.61 சதவீத ஓட்டுகள் பதிவாயின.

பா.ஜ.க, தலைவர் அமித் ஷா போட்டியிடும், காந்தி நகர் தொகுதி உள்ள குஜராத்தில் 58.96 சதவீத ஓட்டுகள் பதிவாயின. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, காங்., மூத்த தலைவர், அஹமது படேல் குஜராத்தில் ஓட்டு அளித்தனர். காங்., தலைவர், ராகுல் போட்டியிடும் வயநாடு தொகுதி உள்ள கேரளாவில், 70.28 சதவீத ஓட்டுகள் பதிவாயின.

மூன்றாம் கட்டத் தேர்தல், பொதுவாக அமைதியாக நடந்தது.பெரும்பாலான மாநிலங் களில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற புகார் காலையில் இருந்தது. ஆனாலும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஓட்டு பதிவு தொடர்ந்தது. மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் லோக்சபா தொகுதிக்குட் பட்ட ஒரு ஓட்டுச் சாவடி யில், காங்., ,யே மோதல்ஏற்பட்டது. இதில், காங்.,கைச் சேர்ந்த, தியாருல் ஷேக், 52, கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 • மாநில வாரியான வாக்குப் பதிவு நிலவரம்அசாம் – 80.75%பிகார் – 59.97%சத்தீஸ்கர் – 68.41%தாத்ரா நகர் & ஹாவேலி – 79.59%

  டாமன் & டையூ – 71.82%

  கோவா – 74.03%

  குஜராத் – 63.71%

  ஜம்மு காஷ்மீர் – 12.86%

  கேரளா – 76.35%

  கர்நாடகம் – 67.72%

  மகாராஷ்டிரம் – 59.74%

  ஒடிசா – 62.49%

  திரிபுரா – 79.92%

  உத்தரப் பிரதேசம் – 61.40%

  மேற்கு வங்கம் – 80.25%