இன்டிகோ / கோ ஏர் விமான பயணமா? – ஜஸ்ட் வெயிட்!

இன்டிகோ / கோ ஏர் விமான பயணமா? – ஜஸ்ட் வெயிட்!

இந்த மார்ச் 2018ல் மட்டும் இன்டிகோ விமானம் சுமார் 400க்கு மேல் விமான சர்வீஸ்களையும், கோ ஏர் நூற்றுக்கு மேல் சர்வீஸ்களையும் நிறுத்தியுள்ளதன் காரணம், ஏர்பஸ் ஏ320 நேரோ பாடி விமானங்களை பிராட் விட்னி எஞ்சின் ஆன ” நியோ” என்ற புது வகை எஞ்சின்களை வாங்கியது தான். இந்த குழப்பத்தின் காரணம். இவ்வகை எஞ்சின்கள் பழைய ஜெட் எஞ்சின்களை காட்டியும் 17-20% எரிபொருள் மிச்சம், குறைந்த சத்தம், குறைந்த பரமாரிப்பு, உருவத்தில் சிறியது மற்றும் எஞ்சினுக்குமுக்கியமான திரஸ்ட் எனப்படும் எஞ்சினின் திறன் பழைய ஜெட்களைன் 5:1ல் இருந்து 12:1 என்று அதிகமாவதால் இதன் பெர்ஃபார்மென்ஸ் இன்டஸ்ட்ரியை வாய் பிளக்க வைத்தாலும், இந்த வகை விமானங்கள் தொடர்ந்து எரிவதும், பாதி வான் நிலையில் ஒரு எஞ்சின் முற்றிலும் நின்று போவதும் என பல குழப்படியால் பல பைலட்கள் எங்களால் இந்த விமானத்தை இயக்க முடியாது என கூறிவிட்டதால் டிசிஜிஏ கூட எஞ்சின்கள் முற்றிலும் சரியாகும் வரை விமான சர்வீஸ்கள் கேன்சல் செய்யபடும் என அறிவுறுத்தியது.

உலகமே இந்த இந்திய விமான கம்பெனிகளான இன்டிகோ / கோ ஏர் குழப்படியால் – வொர்த்தி சர்டிஃபிக்கேட் கொடுத்த ஐரோப்பாஸ்பேஸ் ஏஜென்சி திடீரென்று வார்னிங் கொடுத்தது. இது வரை மட்டுமல்ல ஏப்ரல் 2 வரை சுமார் 429 பயணங்களின் ஸ்லாட்களை கேன்சல் செய்திருக்கிறது இந்த இரு நிறுவனமும். பைலட்கள் 30000 அடி வரை பறந்தால் பிரச்சினை இல்லை என்று கூறுகிறார்கள் ஆனால் 29000 முதல் 36000 அடி வரை ஏடிசி ஸ்லாட் செய்வதால் விமான பைலட்கள் இயக்க மறுக்கின்றனர்.

ஏர்பஸ் மற்றும் பிராட்விட்னி இதன் பிரச்சினையை கண்டுபிடித்துவிட்டோம் ஆனால் ஏப்ரல் மாதத்திர்க்குள் எல்லா எஞ்சின்களும் சரி செய்யப்படும் மற்றும் 40 கோளாறான எஞ்சின்களை பொருத்தி தவறாக அனுப்பிவிட்டோம் என ஓப்பனாக கூறியபோதும் இன்டிகோ/ கோஏர் இதை பற்றி ஒப்பனாக சொல்லாத காரணம் ஏர்பஸ் இவர்களுக்கு 60 ஏ320 விமாங்களை இலவசமாக தர முனைந்தது தான் இந்த பிரச்சினைக்காக. இதன் மதிப்பு மட்டும் 2450 கோடிகள் ஆகும். 110 மில்லியன் விலை கொண்ட எஞ்சின்கள் கண்டிப்பாய் இந்தியர்களின் வாழ்வில் விளையாடுவது இந்த இரு நிறுவனக்களின் பேராசையும் கூட ஏன் என்றால் இரு கம்பெனிகளும் அடுத்த8 வருடத்தில் 475 விமானங்களை இதே எஞ்சினோடு வாங்க கையெழுத்திட்ட பல்க் டீல்.

இன்டிகோ / கோ ஏர் விமான பயணங்கள் ஏப்ரல் 5 வரை இருந்தால் – ரெண்டு  தடவை யோசிச்சு பயணம் செய்யுங்க (ஏ320 விமானமாய் இருந்தால்) மற்றூம் கேன்சலேஷன் பணம் 100% கிடைக்கும்.

error: Content is protected !!