பி.வி. சிந்துவிடம் எங்கள் ஊழியர் கடுமையாக நடந்து கொண்டதில் தப்பே இல்லை! – இண்டிகோ விளக்கம்!
பாட்மிண்டன் உலக தரவரிசையில் பட்டியலில் இரண்டாவது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து நேற்று (சனிக்கிழமை) ஹைதராபாத்திலிருந்து மும்பைக்கு தனியார் விமான சேவையான இண்டிகோ நிறுவனத்தின் விமானத்தில் சென்றது மோசமான நாளாக அமைந்தது என்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது சிந்து, போட்டிகளில் பங்கேற்பதற்கான தனது பேட்டுகள் கொண்ட பையை சுமந்து செல்வது வழக்கம். விமான பணியாளர் அஜீதேஷ், பையை வைத்து விட்டு செல்லும்படி சிந்துவிடம் கடுமையுடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பி.வி.சிந்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”இண்டிகோ விமான ஊழியர் அஜிடேஷ் என்பவர் என்னிடம் மிக மோசமாகவும், கடுமையாகவும் நடந்து கொண்டார். அந்த விமானத்திலிருந்த பணிப்பெண் அஷிமா அவருக்கு பயணிகளிடம் முறையாக நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கியும் அவர் என்னிடம் மோசமாக நடந்து கொண்டது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
இது போன்ற பணியாளர்கள் இண்டிகோ போன்ற விமான சேவை நிறுவனத்தில் பணிபுரிவது பயணிகளிடம் இண்டிகோ நிறுவனத்திற்கான புகழ் கெட்டுப் போக நேரிடும்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து சிந்துவின் தந்தை ரமணா கூறும்போது, ”சிந்துவின் விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய பையை விமான ஊழியர் கடுமையாக கையாண்டார். சிந்து அவரிடம் அதில் பாட்மிண்டன் பொருட்கள் உள்ளது என்று கூறியும் அவர் கடுமையாக நடந்து கொண்டார். இது சிந்துவை காயப்படுத்தியது . அதன் காரணமாகவே அவர் ட்விட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ளார்” என்றார்.
இதையடுத்து பி.வி. சிந்துவின் இந்தச் குற்றச்சாட்டு குறித்து இண்டிகோ நிறுவனம் தங்கள் ஊழியர் தன் கடமையைத்தான் செய்திருக்கிறார் என்று விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் தன் தரப்பில்
சிந்து என்னும் வீராங்கனையால் இந்திய நாட்டுகே பெருமை என்றாலும் ஒரு விமான பயணி என்ற முறையில் அவர் சாதாரண பிரஜையே என்றும் அந்த வகையில் எங்கள் ஊழியரின் நடாவ்டிக்கையை சிந்து பாராட்டவே வேண்டும் என்றும் தெனாவட்டாக பதில் அளித்துள்ளது.