April 14, 2021

தீதும் நன்றும்.. – விமர்சனம்!

N H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் H.சார்லஸ் இம்மானுவேல் தயாரித்துள்ள படம் ‘தீதும் நன்றும்’. அழகிய தமிழ் வார்த்தைகளில் தமிழ்ப்படங்களுக்கு பெயர் வைப்பது அரிதாகிவிட்ட சூழலில் ‘தீதும் நன்றும்’ என அழகு தமிழ் டைட்டிலுடன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார் ராசு ரஞ்சித். இவர் நாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னர் . அன்றாட தேவைகளுக்காக சின்னச்சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் மூன்று நண்பர்கள் பற்றிய கதை தான் இந்தப்படம். ஒருவருக்கு நல்லது நிகழ்வதும் பாதிப்பு ஏற்படுவதும் அவரவர் செய்யும் செயல்களால் தான். தீதும் நன்றும் பிறர் தர வாரா.. தமிழ் பொன்மொழியில் இருந்து தான் இந்தப்படத்தின் டைட்டிலையே தேர்ந்தெடுத்து வைத்து உள்ளோம். தமிழ் கலாச்சாரம் சார்ந்த படம் என்றெல்லாம் இந்த இயக்குநர் சொன்னதை மூன்றாண்டுகளுக்கு முன்னரே நம் ஆந்தை ரிப்போர்ட்டரில் குறிப்பிட்டிருந்தோம்.. ஆனால் இப்படி அழகான தமிழ் பெயரை வைத்துக் கொண்டு உருவாகி இருக்கும் மேக்கிங்-கில் கவனம் செலுத்திய அளவு திரைக்கதையில் ஆர்வமூட்டாத படமிது என்பதுதான் சோகம்..

ராசு ரஞ்சித், கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருப்பதுடன், படத்தை இயக்கியும் உள்ளார். அவரே இயக்குனர் என்பதால் அவருடைய கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், நேர்மையாக கதை சொல்லியிருக்கிறார். லிஜோமோளுடன் காதல், எதிரி களுடன் மோதல் என சராசரி கதாநாயகனுக்கு உரிய வேலைகளை கச்சிதமாக செய்து இருக்கிறார்.

கதை ஆரம்ப பேராவில் சொன்னது நட்பு, ரவுடி கும்பல், வழிப்பறி, முகமூடி கொள்ளை, துரோகம், பழிவாங்கல் எனக் கொண்ட நம் பலருக்கும் தெரிந்தத் திரைக்கதைதான். குறிப்பாக சுப்ரமணியபுரம் படத்தின் மறு பதிப்பு என்றும் சொல்லலாம், ராசு ரஞ்சித், மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்திருப்பதுடன், படத்தை இயக்கி எடிட்டிங்கும் செய்து உள்ளார். புரொடியூசர் & மெயின் ஹீரோ என்பதால் தன் கதாபாத்திரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல் சக ஆக்டர்களுக்கு போதுமான வாய்ப்பு கொடுத்து,இருக்கிறார். லிஜோமோள் மற்றும் அபர்ணா (சூரரைப் போற்று புகழ்) இப்படத்தில்தான் அறிமுகமாம்..அட போட வைக்கிறார்கள்.

சி சத்யாவின் பின்னணி இசையும். கெவின் ராஜின் மேமராவும் படத்தின் தரத்தை ஒரு படி உயர்த்துகிறது.

ஆனால் அடுத்தடுத்தக் காட்சியை ஊகிக்க முடிவதுடன் எல்லை மீறிய சண்டை, ரத்தக் காட்சிகளும், பழைய படச் சாயல்களும் கொஞ்சம் ஆயாசத்தைக் கொடுக்கிறது.

மொத்தத்தில் – தீதும் நன்றும் – .-ஒரு முறை பார்க்கலாம்

மார்க் 2.75?5