தீர்ப்புகள் விற்கப்படும் விமர்சனம்!

தீர்ப்புகள் விற்கப்படும் விமர்சனம்!

ந்திய தலைநகர் டெல்லியில் 2012ல் நடந்த நிர்பயா பாலியல் கூட்டு வன்புணர்வு, 2017 உன்னாவ் சிறுமி கூட்டு வன்புணர்வு, 2018 கத்துவா சிறுமி கூட்டு வன்புணர்வு, 2019 ஹைதராபாத் கால்நடை மருத்துவர் வன்புணர்வு, 2020 ஹத்ராஸ் தலித் சிறுமி வன்புணர்வு இவையெல்லாம் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான மிருகத்தனமான பாலியல் குற்றங்களின் கொடூரமான யதார்த்தத்தை வெளிப்படுத்தும் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. 2020 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் தினமும் சராசரியாக 95 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவானதாகச் சொல்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (National Crime Records Bureau-NCRB) தரவுகள். அதே ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் உட்பட பதிவான வழக்குகள் 5 லட்சத்துக்கு அதிகம். இதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் NCRB சொல்கிறது. 2020 ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்தம் 28,046 (தினப்படி சராசரி 81) வன்புணர்வு வழக்குகள் பதிவானதாக சொல்லும் ஒரு ஆய்வு, 35 சதவிகிதத்துக்கும் குறைவான வன்புணர்வுச் சம்பவங்களே வழக்குகளாகப் பதிவு செய்யப்படுகின்றதாகவும் சொல்கிறது. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதியப்படுவது அதிகரித்திருந்தாலும், பல வழக்குகளில் குற்றவாளிகள் அரசியல், மதம், பணம், சமூக அந்தஸ்து, அதிகார பலம் எனப் பல வழிகளில் தண்டனையிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். மேலும் இவ்வகைச் சம்பவங்கள் குற்றவாளியை விட பாதிக்கப்பட்டவர்கள் பெருத்த அவமானத்தை ஏற்படுத்துவதாக நினைப்பதால் அவர்கள் வழக்குத் தொடர முனைவதில்லை என்பதையும் பலரும் ஒப்புக் கொள்வார்கள். உலகையே உலுக்கிய நிர்பயா வன்புணர்வுச் சம்பவத்துக்குப் பிறகு சில சட்ட திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டாலும், அவை பெரும்பாலும் எழுத்தளவில் மட்டுமே நிற்கும் சூழலில் தீர்ப்புகள் விற்கப்படும் என்ற தலைப்பில் மேற்படி குற்றவாளிக்கு நூதன தண்டனைக் கொடுத்து அதையும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும்படியாகச் செய்திருப்பதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணை இன்னொரு வாழ்க்கைக்குள் அனுப்பி கவர்ந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

கதை என்னவென்றால் ஜி.ஹெச்.சில் டாக்டராக ஒர்க் செய்யும் சத்யராஜ் தன் ஒரே மகளும், டாக்டருமான ஸ்மிருதி வெங்கட்டுக்கு நல்ல வரன் பார்த்து திருமண் ஆயத்தம் செய்கிறார். அச்சூழலில் ஸ்மிருதியை ஒரு கும்பல் கடத்தி போய் பாலியல் வன்கொடுமை செய்து விடுகிறார்கள்.. இதனால் அதிர்ந்து போன சத்யராஜ் போலீஸ், கோர்ட் என்றெல்லாம் போய் தன் மகளுக்கு நியாயம் கேட்டபோது கும்பல் தலைவனின் அப்பா பணபலத்தால் சட்டத்தின் பிடியிலிருந்து கும்பலை மீட்டு விடுகிறார். இதனால் வெகுண்டெழுத்த சத்யராஜ் இந்த கும்பல் தலைவனைக் கடத்திப் போய் அவனின் ஆணுறுப்பை (பொருளாம்) அறுத்து வைத்துக் கொண்டு அதை திருப்பி தர வேண்டுமென்றால் சில பல கொலைகள் செய்யச் சொல்லி பேரம் பேசி சாதிப்பதுதான் தீர்ப்புகள் விற்கப்படும்.

சத்யராஜ் மனைவியை இழந்த அதே சமயம் ஒரே மகளை பாசத்துடன் வளர்க்கும் அப்பாவாக அசத்தி இருக்கிறாரா? அல்லது மகளுக்கு ஏற்பட்ட நிலைமைக்காக சட்டம் கைவிட்ட பிறகு பழிவாங்கும் அப்பாவே அட்டகாசமா என்று பட்டிமன்றமே வைக்கலாம்.. அவ்வளவு நேர்த்தி;; அதிலும் அதிரடியாய் ஆக்சன் எதுவும் செய்யாமல் தன் பாணியில் தன் மகளுக்கான கொடுமை செய்தவர்களை அவ்ந்த கும்பல் டீமை வைத்தே போட்டு தள்ளும் ரோலை அநாயசமாக செய்திருக்கிறார். இந்தக் கதைக்கு சத்யராஜை தவிர வேறொரு நடிகரை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. மகளாக ஸ்மிருதி வெங்கட் எல்லை மீறாமல் பங்களிப்பைக் கொடுத்து அட்ராக்ட் செய்கிறார். அவரது கணவராக வரும் யுவன் மயில்சாமி கேரக்டர் அருமை. சார்லி சில காட்சிகளே வந்தாலும் நிறைவு. ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, ஜார்ஜ் ஆகியோர் தங்கள் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். வில்லனாக வரும் மதுசுதனராவ் மற்றும் அவருடனே பயணிக்கும் ஹரிஷ் உத்தமன் இருவருமே மெனக்கெட்டு படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்..

கருட வேகா ஆஞ்சியின் கேமராவாலும் பிரசாத் எஸ்.என்-னின் இசையாலும் படத்தை இரண்டு கிரேட் உயர்த்தி இருப்ப்தை சொல்லியே ஆக வேண்டும்

‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்’ என்பது சட்டத்துறை சம்பந்தப்பட்ட மிகப் பிரபலமான சொற்றொடர். தாங்களோ, தங்களைச் சார்ந்த சமூகமோ நேரிடையாகப் பாதிக்கப்படாத வரையில் பொதுமக்களும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை ஒரு செய்தியாகவே கடந்து சென்று விடுகிறோம். குற்றம் தொடர்பான இறப்புகள் ஏற்பட்டால் ஊடகங்கள் அதிகப்பட்சம் ஒரு வாரம் அது குறித்துப் பேசுகின்றன. அடுத்த பாலியல் குற்றம் நடக்கும் வரையில் மக்களும், ஊடகங்களும் முந்தைய வழக்குகளை மறந்து விடுகின்றனர். ஒவ்வொரு முறை இவ்வகைச் சம்பவம் நிகழும் பொழுதும், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட கடைசிக் குழந்தை இதுவாக இருக்கட்டும் என்ற வேண்டுதலோடு நம் கடமை முடிந்துவிடக் கூடாது என்பதை சகலரும் உணரும் வண்ணமும் மேற்கண்ட குற்றவாளிகளின் ஆணுப்புறுப்பை அறுப்பதை அரசே அமல் படுத்த வேண்டும் என்பதையும் ஒவ்வொரு ரசிகரையும் யோசிக்க வைப்பதில் இயக்குநர் தீரன் ஜெயித்து விட்டார். அதிலும் ஆரம்ப பேராவில் சொன்னது போல் பாதிக்கப்பட்ட பெண்-னை மேற்படிப்புக்கக வெளிநாடு அனுப்பி புது வாழ்க்கைக்கு அச்சாரம் போட்ட க்ளைமாக்ஸ் காட்சியில் நெக்குருகிறது

மொத்தத்தில் இந்த தீர்ப்புகள் விற்கப்படும் – அனைவரும் காண வேண்டிய படம்

மார்க் 3.5 / 5

error: Content is protected !!