உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 34வது இடம்!

போர்பஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 34வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆண்டுதோறும் அரசியல், தொழிற்துறை, கருணை மனம மற்றும் ஊடகங்களில் தலைமைப் பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஃபோர்பஸ் பத்திரிக்கை பட்டியல் வெளியிடும். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இன்று வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது இடத்தையும்,

அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 29வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த ஆண்டு, பட்டியலில் புதுமுகமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 34வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சரான இவர், மேலும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் ஹெச்.சி.எல் கார்ப்பரேஷின் தலைமை நிர்வாக அதிகாரி நாடார் மல்ஹோத்ரா 54வது இடத்தில் உள்ளார்.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் இணைத் தலைவர் மெலிண்டா கேட்ஸ் 6வது இடத்திலும்,

ஐபிஎம் தலைமை நிர்வாக அதிகாரி ஜின்னி ரோமெட்டி 9வது இடத்திலும்,

பேஸ்புக் சிஇஓ ஷெரில் சாண்ட்பெர் 19வது இடத்திலும்

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் 38வது இடத்திலும் உள்ளனர்.

லண்டன் ராணி இரண்டாம் எலிசபெத் 40வது இடத்தையும்,

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் 42வது இடத்தை பிடித்துள்ளார்.

இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் 100வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.