வாட்ஸ் ஆப் சேவையை 50 லட்சம் நிறுவனங்கள் வர்த்தக சேவைக்காக பயன்படுத்தி இருக்குது!

முன்னொரு காலத்தில் எஸ். எம்.எஸ்., பேஜர் எனப்படும் குறுஞ் செய்தி என்ற பெயரில் வெறும் வார்த்தைகளை மட்டும் பரிமாறிக்கொண்டிருந்த மனித சமூகம், இந்த வாட்ஸ்-அப் வந்ததின் காரணமாக இதன் மூலம் குறுஞ்செய்தி, நெடுந்தகவல், புகைப்படம், காணொளி, குரல் குறுஞ் செய்தி, தொடர்பு என அத்தனை வசதிகளையும் பரிமாறிக் கொள்கின்றனர். இந்தத் தொழில் நுட்ப வருகையில், இதன் மேல் மக்களுக்கு உள்ள அதீத மோகத்தால் இதனைப் பயன்படுத்துவதற் காகவே ஆன்ட்ராய்டு அலைபேசிகளை அதிக விலை கொடுத்தாவது வாங்கிக் கொள்கின்றனர். இதுவரை இணையம் பற்றி அறியாதவர்கள் கூட இந்த அலைபேசியில் இணைய சேவையை பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டு வாட்ஸ்-அப்-ஐ பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூல பலரின் பொழுது வீணாக போகிறது என்று ஆங்காங்கே குரல்கள் எழும்புவது ஒருபக்கம், அதே சமயம் போன் ஒரு வருடத்தில் 50 லட்சம் நிறுவனங்கள் வர்த்தக சேவைகாக இந்த வாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்தி உள்ளனர் என்று தகவ்ல் வெளியாகியுள்ளது..

ஆம்.. சர்வதேச அளவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாட்ஸ் ஆப்பின் பிசினஸ் ஆப் செயலி மூலம் தங்களின் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜனவரியில் பிசினஸ் ஆப் செயலியை தொடங்கியதாக தெரிவித்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம், தங்கள் செயலியை பயன்படுத்தி பல நிறுவனங்கள் வர்த்தகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் 150 கோடி மக்கள் வாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்துவதாகவும், குறிப்பாக இந்தியாவில் சுமார் 20 கோடி மக்கள் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்திக்கின்றனர் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து பெங்களூரு பகுதியை சேர்ந்த ஐவேர் கிளாசிக் நிறுவனம் வாட்ஸ் ஆப் பிசினஸ் செயலி மூலம் 30% விற்பனையை அதிகரித்திருப்பதாக கூறியுள்ளது. வணிக பயன்பாட்டைப் பயன் படுத்தி (SMEs) வணிக விளக்கங்கள், மின்னஞ்சல், ஸ்டோர் முகவரி மற்றும் வலைத்தளம் போன்ற பயனுள்ள தகவலுடன் வாடிக்கையாளர்களுக்கு உதவ முடியும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கலிபோர்னியவில் உள்ள மெனோலோ பார்க் நிறுவனம், வாட்ஸ் ஆப் வணிகத்தின் முதல் ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இந்த செயலி மூலம் நிறுவனங்கள் தங்களது வளர்ச்சியை வலைத் தளங்களில் அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த வர்த்தக செயலி மூலமாக சாரி விற்பனையாளர்கள், செல்லப்பிராணி பராமரிப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் உள்ளூர் கடை விற்பனையாளர்கள் ஆகியோரின் சேவை அதிக வரவேற்பை பெற்றிருப்பதாக மைக்ரோ-தொழில் முனைவோர் நிறுவனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.