October 21, 2021

காற்று மாசுபடுதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் ஸ்மார்ட் ஸ்கார்ஃப்! வீடியோ

காற்று மாசுபாடு காரணமாக நாம் பல்வேறு சுவாசப் பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். வாகனப் புகை, சாலைகளில் பறக்கும் தூசு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் புகை ஆகியவற்றால் காற்று மாசுபாடு ஏற்படுவதை நாம் கண்முன்னே பார்க்கிறோம். ஆனாலும் அதை தடுப்பதற்கு முயற்சி செய்வது இல்லை. தற்போது காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுட்காலமே குறைந்துக் கொண்டிருக்கிறது என்ற புள்ளிவிபரங்கள் நம்மை மேலும் அச்சுறுத்துகின்றன. எரிசக்தி மற்றும் மாசுப்பாடு தொடர்பாக சர்வதேச எரிசக்தி கழகம் (ஐஇஏ) இன்று வெளியிட்ட அறிக்கையில், ”உலகளவில் ரத்த அழுத்தம், உணவுப் பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் ஆகிய 3 காரணிகள் மனித உடல்நலத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. நான்காவதாக காற்று மாசுபாட்டால் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடு காரணமாக காற்று மாசுபடுகிறது.அதனால் ஏற்படும் நோய்களால் சர்வதேச அளவில் ஆண்டுக்கு 65 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர். அவற்றில் வீட்டிற்குள் ஏற்படும் காற்று மாசினால் 35 லட்சம் பேரும், வெளிகாற்று மாசுபடுவதால் 30 லட்சம் பேரும் அதில் அடங்குவர். அதே நேரத்தில் காற்று மாசுபடுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் உயிரிழப்பில் பாதி அளவு இந்தியா மற்றும் சீனாவில் ஏற்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 16 லட்சம் பேர் பலியாகின்றனர். சீனாவில் 22 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவை தவிர இந்தோனேசியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, மற்றும் மெக்சிகோவில் காற்று மாசினால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

tec mar 12

இதற்கிடையே இந்த காற்று மாசுபடுதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் ஸ்மார்ட் ஸ்கார்ஃப் ஒன்று அறிமுகமாகியுள்ளது. வையர் (wair) என பெயர் வைக்கப்படிருக்கும் இந்த ஸ்கார்ஃபை பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.
முன்னரே குறிப்பிட்டது போல் பொதுவாக வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை மற்றும் ப்ளாஸ்டிக் பொருட்களை எரிப்பதனால் உண்டாகும் புகையினால் அதிகமாக காற்று மாசுபடுகிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்ள உருவாக்கப்பட்டதுதான் ஸ்மார்ட் ஸ்கார்ஃப்‌.

காற்று மாசுபடுதலில் இருந்து தற்காத்துக் கொள்ள உருவாக்கப்பட்டுள்ள இந்த wair ஸ்கார்ஃப், மொபைல் ஃபோனுடன் இணைந்து செயல்படுத்தும் வசதி கொண்டது. வீட்டை விட்டு வெளியே வரும் ஒவ்வொரு முறையும் அங்கு காற்றின் மாசு எவ்வளவு இருக்கும், ஸ்கார்ஃப் அணிய வேண்டுமா வேண்டாமா என்பதை வையர் உடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் போன் தனது அப்ளிகேஷன் மூலம் வழிகாட்டும் .

ஆண்கள் மற்றும் பெண்களுடைய வசதிக்கும் விருப்பத்திற்கு ஏற்ற வகையில பல நிறங்கள் மற்றும் வடிவங்களில் இந்த ஸ்கார்ஃப் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை முயற்சியில் இருக்கும் இந்த ஸ்கார்ஃப் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.