தடுப்பூசி ஏழை நாடுகளுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது – உலக சுகாதார அமைப்பு கவலை

தடுப்பூசி ஏழை நாடுகளுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது – உலக சுகாதார அமைப்பு கவலை

ன்னும் பல்வேறு பின்தங்கிய 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இன்னும் கொரோனா தடுப்பூசி கிடைக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்து தகவல் இதோ

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பூசிகளைப் பல்வேறு முன்னேறிய நாடுகள் கண்டறிந்து அதை மக்களுக்குச் செலுத்தி வருகின்றன.

குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை வழங்கி வருகின்றன. ஆனால் உலகில் உள்ள பல்வேறு நாடுகள் இன்னும் தடுப்பூசியின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

இதேபோல் பின்தங்கிய 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை. வளமான நாடுகள் தங்களுக்கான கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. ஆனால் ஏழை நாடுகளுக்கு இது எட்டாக் கனியாகவே உள்ளது.

குறிப்பாக ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. அங்கு ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் அவல நிலை உள்ளது. கொரோனா வைரஸ் சிகிச்சை மையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கூட தடுப்பூசி கிடைக்கவில்லை. அவர்களுக்கு உதவ வளர்ந்த நாடுகள் முன்வர வேண்டும்.

error: Content is protected !!