December 6, 2022

முதல்வர் ஸ்டாலினுக்கு வரப்போகிற 15 நாட்கள்தான் ரியல் ஆசிட் டெஸ்ட்!

ண்மையைச் சொன்னால் மீடியாக்களில் சொல்லப்படும் தகவல்களுக்கும் கள நிலவரத்துக்கும் நிறைய வித்தியாசம். மிக மிக மிக அசாதாரணமான ஒரு சூழல். வரப்போகிற 15 நாட்கள் மிக மிக மோசமான நாட்களாக இருக்கும் என்று தெரிகிறது. எது இப்போதைக்கு நம்பர் ஒன் தேவை என்பதை முதலில் தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தீர்வு காண மருத்துவத் துறையினரையும் தாண்டி எங்கெல்லாம் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்றால் நிச்சயம் பலனளிக்கும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆபத்து நெருங்கிவிட்ட நோயாளிகளுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே முதலுதவி செல்லும் வகையில் மைக்ரோ லெவல் கண்ணோட்டம் மிகவும் அவசியம். இதற்கு கீழ்மட்ட அளவில் சிறுசிறு ஒருங்கிணைப்பு குழுக்களை நியமித்து முன்மாதிரியை காட்டினால் பலரும் அதனை பின்பற்ற ஆரம்பிப்பார்கள். ஒரு நாளைக்கு வருகின்ற போன்களில் பெரும்பாலானவை கண்ணீர் மல்க ஆக்சிஜன் படுக்கை வசதி உதவி கேட்டுத்தான்.

சேலத்தில் எந்த மருத்துவமனையிலும் அனுமதி கிடைக்காமல் நேற்று முன்தினம் மாலை மாலை ஆக்சிஜன் கிடைக்காமல் சார் உதவி வேண்டும் என்று கேட்டார் நண்பர். சேலத்தில் வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததும் அருகில் உள்ள நாமக்கல் கரூர் திருப்பூர் என்றெல்லாம் அலசினோம் ஒன்றும் தீர்வு கிடைக்கவில்லை. கடைசியில் அவரை காப்பாற்ற கிடைக்கும் வசதிகளை வைத்து வீட்டுக்குள்ளேயே வைத்தியம் பார்ப்பது என்று முடிவானது. நாம் உதவி என்று கேட்டதும் மிகவும் சிரமப்பட்டு ஏற்பாடு செய்து வேலூரில் இருந்து 200 கிலோ மீட்டர் தள்ளியுள்ள சேலத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டியை நள்ளிரவு பாராமல் காரில் அனுப்பி வைத்தார் நண்பர்.. இரண்டு தரப்புகள் மற்ற விஷயத்தில் உதவ நோயாளியை அபாய கட்டத்தில் இருந்து காப்பாற்ற முடிந்தது.

ருக்கு ஊர் ரோட்டரி கிளப் லயன்ஸ் கிளப் என இன்னும் என்னென்னவோ அமைப்புகள் எல்லாம் உள்ளன.. விஷயம் தெரிந்தவர்களுடன் கொஞ்சம் கைகோர்த்துக்கொண்டு இறங்கினால் இந்த நேரத்தில் எண்ணற்ற பேருக்கு உதவலாம். நெய்வேலி சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆக்சிஜன் தேவைக்காக அரசு மருத்துவமனைகளை நாடிநாடி பலனில்லாமல் 120 கிலோமீட்டர் பயணம் செய்த நிலையில் கடைசியில் இறந்தே போனார் என்ற தகவல் அவ்வளவு தூரம் நம்மை உலுக்கி எடுக்கிறது.

மாவட்ட இணை இயக்குனர் முதற்கொண்டு சுகாதாரத்துறை செயலாளர் வரை வேண்டுகோள் வைத்தால் உதவ கூடியவர்கள்தான். ஆனால் இப்போது நிலைமை, வேண்டுகோள்களுக்கெல்லாம் முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுத்து உடனே உதவக்கூடிய நிலையில் அவர்களுடைய சூழலே இல்லை என்பதுதான் நிதர்சனம். ஸ்டாலின் அவர்கள் செய்த முதல் சறுக்கல் இரண்டாம் தேதி முடிவுகள் வெளியாகி உறுதியான நிலையில் மூன்றாம் தேதி மாலையே பதவியேற்று நடவடிக்கைகளை முடுக்காதது.. பதவியேற்க ஏழாம் தேதி வரையும் லாக்டௌனுக்கு சில நாட்கள் வரையும் காத்திருந்தது காலவிரயம்.

முந்தைய கொரானாவைவிட 4 மடங்கு பாதிப்பு அதிகமான நிலையில் பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வரப்போகிற 15 நாட்கள்தான் ரியல் ஆசிட் டெஸ்ட். அமைச்சர் பெருமக்கள் தங்கள் துறை சார்ந்த தேவையற்ற ஆய்வுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இப்போதைக்கு அவரவர் மாவட்டங்களில் சுகாதாரத் துறையுடன் இணைந்து மக்களுக்கு உதவுவதில் பம்பரம்போல் சுற்றவேண்டும்..

அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் நோயாளிகள் வருகை மற்றும் சிகிச்சையில் ஏற்படும் பற்றாக்குறை போன்றவற்றை துல்லியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள் மூலம் தொடர்ந்து மானிட்டர் செய்து வந்தால் நிச்சயம் ஏராளமானோருக்கு தக்க சமயத்தில் உதவும் முடியும்.. இந்த நிலையிலும் தமிழக அரசு அரசை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. பிரச்சனைக்கு தீர்க்க இவ்வளவு வழிகள் இருக்கு என்று சுட்டிக்காட்டி இதையெல்லாம் செய்யாமல் ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள் என்று கேட்கலாம்.

ஏழுமலை வெங்கடேசன்