பன்றியின் இதயத்துடன் படுக்கையில் இருந்த நோயாளி 2 மாதம் ஆன நிலையில் உயிரிழந்தார்!

பன்றியின் இதயத்துடன் படுக்கையில் இருந்த நோயாளி 2 மாதம் ஆன நிலையில் உயிரிழந்தார்!

மெரிக்காவின் டேவிட் பென்னட் என்ற 57 வயது இதய நோயாளி, மேரிலேண்ட் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக மாற்று இதயம் பொருத்த வேண்டிய நிலை இருந்தது. மாற்று உறுப்பை ஏற்கும் அளவுக்கு அவரது உடல்நிலை இல்லை. கடைசி வரைக்கும் படுக்கையில் உயிர் காக்கும் கருவி உதவியிலே இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், பன்றியின் இதயத்தை பொருத்தும் முயற்சிக்கு ஒப்புக்கொண்டனர்.

ஜனவரி 7 ஆம் தேதி, முதன்முறையாக பன்றியின் இதயத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்தனர். இதற்கு முன்பு, நோயாளியின் உடல் விலங்குகளின் பாகங்களை விரைவாக மறுத்ததால், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, மேரிலாண்ட் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மரபணு திருத்தப்பட்ட பன்றியின் இதயத்தைப் பயன்படுத்தினர்.

அதாவது, உறுப்பை வேகமாக நிராகரிக்கும் செல்லை அப்புறப்படுத்திவிட்டு, உறுப்பை ஏற்றுக்கொள்ளும் மனித மரபணுக்களை சேர்த்து வடிவமைத்தனர். அவருக்கு பொருத்தப்பட்ட பன்றியின் இதயம் சீராக செயல்படுவதாக மருத்துவமனை தரப்பில் அவ்வப்போது அறிக்கை வெளியிடப்பட்டு வந்தது. கடந்த மாதம், அவர் மருத்துவமனை படுக்கையில் இருந்தப்படி, டிவி பார்க்கும் வீடியோவும் வெளியிட்டது.

இந்நிலையில், 57 வயதான டேவிட் பென்னட், மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் காலமானார். அவர் மரணத்திற்கு சரியான காரணத்தை மருத்துவர்கள் சொல்லவில்லை. ஆனால், சில நாள்களாகவே அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாக தெரிவித்தனர்.

error: Content is protected !!