September 29, 2021

ஐசிசியின் புதிய விதிமுறைகள் நாளை முதல் அமல்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், ஐசிசியின் புதிய விதிமுறைகள் வரும் 28ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளுதல், வன்முறையில் ஈடுபடும் வீரர்களை மைதானத்தை விட்டு அனுப்பும் அதிகாரம் நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது. விதிமுறை மாற்றங்களில் முக்கியமானது, டி.ஆர்.எஸ் முறையைப் பயன்படுத்தி எல்.பி.டபுள்யூவுக்கு கேட்கப்படும் அப்பீல், இனி கணக்கில் வராது. அதாவது, எல்.பி.ட.பிள்யு மீதான அப்பீல் தோல்வியடைந்தாலும், ரிவ்யூக்களின் எண்ணிக்கை குறையாது. அதேபோல், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் டி.ஆர்.எஸ் முறை இனி டி20 போட்டியிலும் அமலுக்கு வரவுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 80ஓவருக்கு மேல் டி.ஆர்.எஸ் முறை வழங்கப்படாது என்றும், அறிவித்துள்ளது. வீரர், ரன் எடுக்க ஓடும்போது, கிரீசுக்குள் நுழைந்தாலும் கூட ஸ்டம்பு தாக்கப்படும் சமயத்தில் வீரரின் பேட்டோ அல்லது கால்களோ அந்தரத்தில் இருந்தால் ரன்-அவுட் வழங்கும் முறையை தளர்த்தி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது, ஆகிய புதிய விதிமுறைகள் இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா தொடர் தொடங்கி நடைபெற்று வருவதால் இதில் இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவி ல்லை. வங்கதேசம், தென்னாப்ரிக்கா, இலங்கை-பாகிஸ்தான் அணிகள் விளையாடும் தொடரிலிருந்து புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.