Exclusive

தேசிய பெண் குழந்தைகள் தினமின்று!

பெண் குழந்தைகளுக்கான தினமாக இந்த ஜனவரி 24ம் தேதியை கடந்த 2008-ம் ஆண்டு முதல் அமல் படுத்தப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்ட இந்த நாள் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெண் குழந்தைகளுக்கு நேரும் பிரச்னைகளைத் தடுக்கவும், பெண் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்யவும், சமூகத்தில் அவர்களுக்கான சம உரிமையை அளிக்கவுமே இந்த நாள் கொண்டு வரப்பட்டது.

பெண் குழந்தைகள்தான் குடும்பத்தின் அச்சாணியாக விளங்குகிறார்கள். ஒரு குடும்பத்தின் மொத்த உணர்ச்சிக் கலவையும் பெண் குழந்தையை அடிப்படையாகக் கொண்டே வெளிப்படுகிறது. பெண் குழந்தை பிறப்பை கொண்டாடும் வகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பாராட்டத்தக்கது. எனினும், இன்றும் பெண் குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை சில இடங்களில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதை தடுக்கும் வகையின் இந்தியாவில் பெண் குழந்தைகளுக்காக அரசாங்கம் கொண்டு வந்த சட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

குழந்தை திருமண தடை சட்டம், 2006 : இந்த சட்டம் குழந்தைத் திருமணத்தைத் தடுத்து பெண் குழந்தைகளின் கல்விக்கு உறுதியளிக்கிறது. இந்த சட்டத்தின்படி திருமணம் செய்து வைக்கும் பெற்றோர் மட்டுமல்லாது இதற்கு துணை நிற்கும் உறவினர்கள், நண்பர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் தண்டனை அளிக்கப்படும். இச்சட்டம் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 1 லட்சம் வரை அபராதமும் விதிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ கருக்கலைப்புச் சட்டம், 1971 : இந்தியாவில் பெண் குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்கிறது இந்தச் சட்டம். அதாவது கர்ப்பமாக இருக்கும் போதே கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண்ணாக இருப்பின் கருக்கலைப்புச் செய்யும் போக்கு அதிகரித்த நிலையில், கருக்கலைப்புச் செய்வதே குற்றம் எனக் கூறி இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. அதேபோல் கர்ப்பிணியின் குழந்தைப் பிறப்பில் சிக்கல்கள் இருந்தால் மட்டுமே அதுவும் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் ஒப்புதலோடுதான் கருக்கலைப்புச் செய்ய வேண்டும். இல்லையெனில் அது சட்டத்திற்கு எதிரானது. தண்டனைக்குரியவராகக் கருதப்படுவார்கள்.

பெண் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம், 2009 : இது குழந்தைகளுக்கான பொதுவான சட்டம் என்றாலும் அதின் பெண் குழந்தைகளின் கல்விக்கும் உறுதியளிப்பது பெரும் பயனளிக்கிறது. இந்தச் சட்டம் 1 – 8 வகுப்பு வரை குழந்தைகளின் கல்வி கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு தடையாக இருக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனைக்குரியவர்கள்.

பெண் குழந்தைகளை பாலியல் தொழிலிருந்து பாதுகாக்கும் சட்டம் : 18 வயதுக்குக் குறைவான பெண் குழந்தைகளை கட்டாயப்படுத்தி அல்லது கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதேபோல் பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகளை விற்பதும், வாங்குவதும் குற்றமாகும். அப்படி செய்தால் ஐபிசியின் பிரிவு 372 மற்றும் 373 படி 10 வருடம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

சட்டப் பிரிவு 363-A படி 10 வயதுக்குக் குறைவான பெண் குழந்தையைக் கடத்தினால் அவர்களுக்கு ஜாமினில் வெளிவராதபடி கடுமையான தண்டனை வழங்கப்படும்.

18 வயதுக்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகளை பாலியல் வன்புனர்வுக்கு உள்ளாக்கினால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் , அபராதமும் விதிக்கப்படும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப மரண தண்டனை வரை விதிக்கப்படும் சட்டம் சமீபத்தில் கொண்டுவரப்பட்டது.

பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள்

மத்திய அரசு பெண் குழந்தைகளின் சேமிப்புத் திட்டமாக ’சுகன்யா சம்ரித்தி’ என்ற நலத்திட்டத்தைக் கொண்டு வந்தது. இது பெண் குழந்தை பிறந்து 10 வயது வரை அவர்களின் பெயரில் மாதம் 1000 ரூபாய் பெற்றோர்கள் சேமிப்பாக வைக்க வேண்டும். 10 வயதுக்குப் பின் அந்த பெண் குழந்தையே தானாக வங்கிக் கணக்கைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 18 வயதில் இந்த சேமிப்பு முடிவடையும். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கு அல்லது திருமணத்திற்கு உதவுவதற்கான கொண்டுவரப்பட்டது.

அதாவது பெண் குழந்தைகளைக் காப்போம் கற்பிப்போம் என்ற நலத்திட்டமும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இது குறைந்து வரும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதித்தை அதிகரித்து அவர்களுக்கு அதிகாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. அதோடு இயல்பாக வாழ்வதற்காக உத்திரவாதம் அளிக்கவும் , அவர்களுக்கு கல்வியை உறுதி செய்யவுமே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

இடைநிலைக் கல்வி பயிலும் சிறுமிகளுக்கான தேசிய ஊக்கத் தொகை திட்டம் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவித்தொகை அளிக்கிறது. அதாவது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் குழந்தைகள் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தால் அவர்களின் பெயரில் 3000 ரூபாய் செலுத்தப்படுகிறது. அவர்கள் 10 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றபின் அந்த பணத்தை எடுத்து உயர்நிலைக் கல்விக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படியில்லையென்றால் 18 வயது பூர்த்தி அடைந்தபின் எடுத்துக்கொள்ளலாம்.

அதேபோல் தமிழக அரசும் பெண் குழந்தைகளுக்கான சில திட்டங்களை வகுத்துள்ளது.

அதில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் பெண்குழந்தைகளுக்கு உதவித் தொகை அளிக்கிறது. 20 வயது முடியும் போது வட்டியுடன் முதிர்வுத் தொகையாக அளிக்கிறது.

குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை என்றால் மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் 20வது ஆண்டுகள் முதலீடு செய்து அதன் பிறகு 50,000 ரூபாய் அளிக்கிறது. அதேபோல் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் 25,000 ரூபாய் பணம் செலுத்தப்படுகிறது. மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தாலோ, தத்து எடுத்தாலோ இந்த திட்டம் செல்லாது.

நிலவளம் ரெங்கராஜன்

aanthai

Recent Posts

“பத்ம பூஷன் ” வாணி ஜெயராம் திடீர் மறைவு : தமிழ் சினிமா உலகிற்கும் , இசை உலகிற்கும் பெரும் இழப்பு.

பிரபல பாடகி வாணி ஜெயராம் இசை உலகில் இதுவரை 19 மொழிகளில் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்; இந்நிலையில்…

3 hours ago

ரன் பேபி ரன் – விமர்சனம்!

பொதுவாக சினிமாவில் ஏகப்பட்ட வகைகள் உள்ளது. குடும்பம், பழிவாங்குதல், நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட்,இப்படி இன்னும் நிறைய வகைகள்…

1 day ago

அதிமுக & இரட்டை இலை விவகாரம் : சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம். மேலும்…

1 day ago

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில் & ரூ.25 ஆயிரம் அபராதம் – புதுவை போலீஸ் அறிவிப்பு

நம் நாட்டில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக…

1 day ago

பொம்மை நாயகி -விமர்சனம்!

இந்திய சமூகத்தினுள் ஆண்டாண்டு காலமாக வேரூன்றி இருக்கும் சாதி எனும் வடிவத்திற்கு எதிராக, பொதுத்தளத்தில் களமாடிய மற்றும் களமாடுபவர்களின் பட்டியல்…

1 day ago

ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு செயலியும், இன்ன பிறவும்!

இந்தாண்டுக்கான மிகப்பெரிய ட்ரெண்டிங் வார்த்தைகளில் ஒன்றாக ChatGPT மாறியுள்ளது. நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சிகரமான உரையாடல் AI சாட்பாட்…

1 day ago

This website uses cookies.