Exclusive

மாணவர்களைக் கவர வரும் படம் ‘காலேஜ் ரோடு’!

ன்று தமன்னாவோடு ‘கல்லூரி’ படத்தில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தும் திரையுலகில் தொடர்ந்து நடிக்க முடியாமல் காணாமல் போன நடிகர் லிங்கேஷ், இன்று ‘காலேஜ் ரோடு’ படத்தின் மூலம் கதாநாயகனாக மீண்டும் வந்துள்ளார்.

நடிகர் லிங்கேஷ் பல படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர். இவர் நடித்த ‘கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’ படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தாலும், கதாநாயகனாக இப்போதுதான் ‘காலேஜ் ரோடு’ படத்தில் அறிமுகமாகிறார். ஏறக்குறைய கல்லூரி படத்திற்காக 10 வருடங்களுக்கு முன்னால் எடையை குறைத்து இரண்டு வருடங்கள் திரைப்படத்திற்காக கடினமாக உழைத்த லிங்கேஷ் பின்னர் தொகுப்பாளராக தன் வாழ்க்கையை கடந்து , மெட்ராஸ், கபாலி பரியேறும் பெருமாள், ரஜினிகாந்த் போன்ற திரைப்படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்தார். கடின உழைப்பும் , அர்பணிப்போடும் போராடி அன்று கல்லூரியில் படத்தில் கதா நாயகனாக நடிக்காமல் விட்டதை காலேஜ்ரோடு திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி சாதித்து விட்டார்.

இந்தப் படத்தை M.P.Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது. ஆப்ரோ இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநரான ஜெய் அமர்சிங் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

மாணவர்களின் கல்விக் கடன் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியிருக்கும் இத்திரைப்படம் மாணவர்கள் மத்தியில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக் குழுவினர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே இந்தப் படத்தை பார்த்த இயக்குநர் ரஞ்சித் படத்தைப் பெரிதும் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு திரைப்படம் பெரும் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

இந்த ‘காலேஜ் ரோடு’ படம் வரும் டிசம்பர் 30-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பி.வி.ஆர். பிச்சர்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

aanthai

Recent Posts

அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் மோடி மீது ராகுல்காந்தி சரமாரி குற்றச்சாட்டு…!

பிரதமர் மோடியின் நண்பரான, அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு…

3 hours ago

உணவு விநியோகம் பெற உதவும் வாட்ஸ் ஆப் எண் 8750001323 – இந்திய ரயில்வே அறிமுகம்!

நம் நாட்டின் ரயில் பயணிகள் வாட்ஸ்-ஆப் மூலம் உணவை முன்பதிவு செய்துகொள்ளும் புதிய வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப் படுத்தியுள்ளது.…

6 hours ago

சர்ச்சைகளுக்கிடையே விக்டோரியா கெளரி நீதிபதியாக பதவியேற்பு..!

பாஜக உறுப்பினர் அட்டை எல்லாம் வைத்திருந்த விக்டோரியா கெளரிக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை…

10 hours ago

இணையில்லாத இறையன்பு! காகிதப் படகில் சாகசப் பயணம்!

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு. “உங்களுக்கு எதிர்காலத்தில் யார் மாதிரி ஆக ஆசை?” என்று ஐஏஎஸ் அகாடமி ஒன்றில்…

16 hours ago

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பாஜக வழக்கறிஞர் நியமனம் குறித்து எதிர்த்து மனு!

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்கு 8 பேரின் பெயர் பட்டியலை மத்தியு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.…

1 day ago

சிம்ஹா நடித்த ‘வசந்த முல்லை’ படத்தின் டிரைலர் வெளியீடு!

நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் 'வசந்த…

1 day ago

This website uses cookies.