September 18, 2021

உலகத்தின் அதி நீள சுரங்கப்பாதை ; சுவிட்ச்சர்லாந்தில் பிரமிப்பு- வீடியோ

உலகத்தின் அதி நீள சுரங்கப்பாதை ஜூன்5 முதல் திறந்து விடப்பட்டிருக்கிறது சுவிட்ச்சர்லாந்தில். நிறைய தான் திறக்கிறாங்களே இதில் என்ன விஷேஷம்னு கேட்டால் தரைக்கு அடியில் அதாவது 2.3 கிலோமீட்டர் கீழே (2300 மீட்டர்) 57 கிலோமீட்டர் தூரத்தை சிங்கிள் டனல் மூலம் கட்டியிருக்கும் இந்த சுரங்கப்பாதை சுமார் 12 பில்லியன் அதாவது 1200 கோடி டாலர்களை விழுங்கி 17 வருட உழைப்பில் ஸ்வில் ஆல்ப்ஸ் மலையை எளிதில் அடைய வைத்திருக்கிறது.

ravi june 14 a

இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்வதானால் இந்த சுரங்கப்பாதைக்கான தோராயமான வடிவமைப்பு முதன் முதலில் 1947-ம் ஆண்டும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கர்ல் எட்வேர்டு கார்னர் வெளியிட்டார். காட்தர்டு பேஸ் சுரங்கம் என்ற பெயரிடப்பட்ட இந்த சுரங்க வழி ரயில் பாதையின் நீளம் 57 கிலோ மீட்டர்கள் கொண்டுள்ளது.

இந்த சுரங்கபாதை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சுரங்க பாதை இன்று திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக, ஜப்பான் நாட்டில் உள்ள செய்கன் என்ற சுரங்க வழி ரயில் பாதை 53 கிலோமீட்டர் தான் உலகின் மிக நீளமான சுரங்க வழி ரயில் பாதையாக இருந்து வந்தது.

2,400 பணியாளர்களை கொண்டு சுமார் 12 பில்லியன் பிராங்க் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதை சுவிட்சர்லாந்தின் உறி மாகாணத்தில் உள்ள எர்ஸ்ட்பெல்டு என்ற பகுதியில் தொடங்கி, டிசினோ மாகாணத்தில் உள்ள போடியோ என்ற பகுதியில் நிறைவடைகிறது.

இந்த சுரங்கப்பாதையில் ரயில்கள் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த சுரங்கத்தில் டெட்ராபோல் டெக்னாலஜி மற்றூம் ஏர்பஸ்ஸின் ஸ்பேஸ் டெக்னாலஜி என பல வகை அம்சங்களை உள்ளடக்கி உண்டான இந்த சுரங்கப்பாதை வரலாற்றில் இடம் பிடித்த ஒன்று.

இப்போ நீங்களே இந்த வீடியோவை பாருங்கள்

https://www.youtube.com/watch?v=RT7nQ1bFSPA