July 27, 2021

சுமத்ரான் இன காண்டாமிருகம் முற்றிலும் அழிந்தது : மலேசியா தகவல்

மலேசியாவின் கடைசி சுமத்ரா காண்டாமிருகம் இறந்ததாக சபா மாநிலத்தின் சுற்றுலா, கலாசாரம் சுற்றுச்சுழல் அமைச்சர் கிறிஸ்டீனா லியூ தெரிவித்தார். பெண் காண்டாமிருகமான இமாம் நேற்று அதிகாலை 5:35 மணியளவில் இறந்ததாக அவர் கூறினார்.

ஒருகாலத்தில் கிழக்கு இந்தியா மற்றும் மற்றும் மலேசியா வனப்பகுதிகளில் அதிக அளவில் காணப்பட்ட சுமத்ரான் வகை காண்டாமிருகங்கள், தற்போது உலக அளவில் 80-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே காணப்படுகிறது.

சுமத்ரான் வகை காண்டாமிருகம் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமாகும். இந்நிலையில் மலேசியா நாட்டில் சுமத்ரான் வகையில் கடைசியாக எஞ்சியிருந்த, இமான் என்ற ஒரே ஒரு பெண் காண்டாமிருகமும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு தங்களிடம் வந்ததில் இருந்து உயிரிழந்தது வரை இமானை சிறப்பான முறையில் பராமரித்ததாக மலேசிய அரசு கூறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அதிக ரத்த இழப்பு காரணமாக ஏற்பட்ட சிக்கலான தருணங்களில் இருந்து, மீண்டு இமான் பல முறை மரணத்திலிருந்து தப்பியதாக அதிகாரிகள் கூறினர். இதனிடையே மலேசியாவின் கடைசி ஆண் சுமத்ரான் காண்டாமிருகம் கடந்த மே மாதத்தில் இறந்தது.

தவிர மற்றொரு பெண் காண்டாமிருகம் 2017-ல் இறந்தது. சுமத்ரான் காண்டாமிருகத்தை இனப்பெருக்கம் செய்ய இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என மலேசிய அரசு குறிப்பிட்டுள்ளது.