சிறுத்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 90 சதவீதம் வரை குறைஞ்சிடுச்சு!

சிறுத்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 90 சதவீதம் வரை குறைஞ்சிடுச்சு!

இந்தியாவில் சிறுத்தைகள் பெரும் ஆபத்தில் உள்ளது .இதற்கு முக்கிய காரணமாக விளங்குபவர் கள் மனிதர்கள் தான் .அதிலும் குறிப்பாக கிராமத்தில் வாழும் மக்கள் தங்கள் ஊருக்குள் வரும் சிறுத்தைகளை வேட்டை ஆடுகின்றனர் .இப்படி தான் அதிக சிறுத்தைகள் உயிரிழந்துள்ளன . அந்த வகையில் நம் நாட்டில் இருந்த சிருத்தைகளில் 90 சதவீதம் வரை அழிக்கப்பட்டு விட்டன என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

சிவந்த பொன்னிற உடல். மார்பு, வயிறு, கால்கள், வால் நுனி வெண் நிறம். கறுத்த சின்னச் சின்னப் புள்ளிகளின் ஊடே பெரும்புள்ளிகளுடன் சுழல் வேகத்தில் திரும்புவதில், பாய்வதில் தனித்துவம் மிக்கத் தொன்மையான விலங்குதான் சிறுத்தை. காட்டில் புலிகளுக்கு அடுத்தபடியாகச் சிறுத்தை தான் ஆகிருதியான விலங்கு என்றாலும், தங்களது வாழிடங்களுக்கு அருகில் சிறுத்தைகள் வாழப் புலிகள் அனுமதிப்பதில்லை. தாவர உண்ணிகள் அதிகமுள்ள இடங்களில் சிறுத்தைகள் திரிவதைப் புலிகள் ஏற்பதில்லை. இயற்கைச் சமன்பாட்டில் யுகம் யுகமாய்த் தொடரும் படிநிலை வளர்ச்சியின் விளைவுதான் இது.

அடர்ந்த காடுகளில் மறைந்து வாழும் புலிகளைப் போல் வாழ்பவை அல்ல சிறுத்தைகள். திறந்த வெளி, பள்ளத்தாக்கு, பாறைகள் நிறைந்த சிறு குன்றுகள், மனிதக் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள தரிசு நிலங்கள், முட்புதர்கள் போதும் சிறுத்தைகள் வாழ்வதற்கு. பரந்த காடுகள் வாய்த்த பகுதி களில் மான், மயில், கேளையாடு, பன்றி, குரங்கு, காட்டுக்கோழி, முயல் என்று கிடைத்ததைத் தின்று காலம் தள்ளியவை சிறுத்தைகள். காடழித்து நகரங்கள் மூர்க்கமாக எழுந்த பிறகு, காட்டிலி ருந்து இரை தேடி மனிதக் குடியிருப்புகளுக்கு வரத் தொடங்கின சிறுத்தைகள். பத்தாண்டு களுக்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழ்ந்த ‘சிறுத்தை – மனித எதிர்கொள்ளல்’ (Leopard – man conflict) கடந்த மூன்று மாதங்களில் உச்சத்தை அடைந்துள்ளது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாலும் இதனால் சிறுத்தைகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

இதற்கு கவனத்தில் கொண்டு தீர்வு காணும் நோக்கில் 2014 ஆம் ஆண்டு முதல் ஆய்வு நடைபெற்று வருகிறது. நடைபெற்ற அந்த ஆய்வின் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு 51 சிறுத்தைகளும் ,2016 ஆம் ஆண்டு 51 சிறுத்தைகளும் ,2017 ஆம் ஆண்டு 63 சிறுத்தைகளும் மற்றும் 2018 ஆம் ஆண்டு மட்டும் 80 சிறுத்தைகளும் இறந்து உள்ளதாக கூறியுள்ளனர் . இந்த ஆய்வின் முடிவு அறிக்கையில் , விபத்துகளில் சிறுத்தைகள் இறந்ததை விட மனிதர்களின் தாக்குதலில் தான் அதிகம் இறந்து உள்ளன .மனிதர்கள் மூலம் தினமும் ஒரு சிறுத்தை இறந்து கொண்டேதான் இருக்கிறது .இந் நிலையில் அதிர்ச்சி தரும் வகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் முதல் நான்கு மாதத்தில் மட்டும் 40 சதவீதம் அதிகரித்து அதாவது 218 சிறுத்தைகள் இறந்துள்ளது .இந்த இறந்த சிறுத்தைகளில் பெரும்பாலான சிறுத்தைகள் மனிதர்களின் தாக்குதலில் இறந்து உள்ளது.இவ்வாறு மனிதர்களின் கொடூர செயலால் இந்தியாவில் சிறுத்தை இனம் ஆபத்தில் உள்ளதாக ஆய்வில் கூறியுள்ளனர் .

இந்நிலையில் பெங்களூரு வனஉயிரின கல்வி மையம் மற்றும் டேராடூனில் உள்ள இந்திய வன உயிரின கல்வி நிறுவனம் சார்பில் நாட்டில் உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை, தக்காண பீடபூமி, இமயமலை மற்றும் கங்கை சமவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் நடைபெற்றன. இதில் கடந்த 120 முதல் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்த சிறுத்தைகளின் எண்ணிக்கையில், 75 முதல் 90 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் கடந்த ஒராண்டில் அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 94 சிறுத்தைகளும், உத்தரகாண்டில் 79 சிறுத்தை களும் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Posts

error: Content is protected !!