October 20, 2021

இந்திய அணிக்கான புதிய ‘ஜெர்ஸி’ : பிசிசிஐ ரிலீஸ்!

ந்திய அணியின் புதிய வடிவ பில்லியன் சீரிஸ் ஜெர்ஸியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று அறிமுகம் செய்தது.அடர்நீல நிறத்தில், பல டிசைகளுடன் இருக்கும் இந்தப் புதிய ஆடைக்கு ‘பில்லியன் சீரிஸ் ஜெர்ஸி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி அணிந்த ஜெர்ஸியைப் போல் கருநீலத்தில் பச்சை, சிவப்பு, நீலம், வெள்ளை கோடுகளைக் கொண்ட ஜெர்ஸி வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரிலிருந்து அந்த ஜெர்ஸியைத்தான் இந்திய வீரர்கள் அணிந்து வருகிறார்கள். இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்காக புதிய வடிவ ஜெர்ஸியை பிசிசிஐ அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. இந்திய அணியின் கிட்ஸ் ஸ்பான்ஸர் நிறுவனமான எம்பிஎல் நிறுவனம் இந்த ஆடைகளைத் தயாரித்துள்ளது.

பிசிசிஐ அமைப்பு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் ஆதரவை, ஈர்ப்பைப் பெற்ற ஜெர்ஸி. இந்திய அணிக்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருங்கள்’ எனத் தெரிவித்துள்ளது.

கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் புதிய ஜெர்ஸியை அணிந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளது.