இலங்கையில் சமாளிக்க முடியாத நெருக்கடி; தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம்!

லங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர். இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ரத்மலானே பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அந்நாட்டின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதசா கலந்து கொண்டார்.

இலங்கை அரசின் அன்னிய செலவாணி இருப்பு குறைந்ததால் ஏற்றுமதி, இறக்குமதியில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதே அரிதாகியுள்ளது. கிடைத்தாலும் விலை பல மடங்கு இருப்பதால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசை கண்டித்து மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர். இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ரத்மலானே பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அந்நாட்டின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதசா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த அரசுக்கு நீண்ட காலம் உள்ளதாகவும், ஆனால் மக்களிடையே அரசுக்கு ஆதரவு இல்லை என்றும் தெரிவித்தார். இந்த அராஜக அரசை தோற்கடித்து நாட்டை புதிதாக கட்டியெழுப்பும் குழுவிற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.