இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலையில் 244 டாக்டர்கள் பலி!

இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலையில் 244 டாக்டர்கள் பலி!

‘ஆள்கொல்லி’ கொரோனா வைரசிவின் 2வது அலையில் இந்தியா முழுக்க 244 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாகத் ஒரு அதிர்ச்சித் தகவலை இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டும் 50 டாக்டர்கள் பலியானதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதிகபட்சமாக பீகாரில் 69 டாக்டர்களும், உத்தரப்பிரதேசத்தில் 34 பேரும், டெல்லியில் 27 பேரும் உயிர் இழந்துள்ளனர். இந்த டாக்டர்களில் 3% பேருக்கு மட்டுமே முழு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் டாக்டர்களில் பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. டாக்டர்கள் 48 மணி நேரம் தொடர்ந்து பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ஓய்வு எடுப்பதில்லை. இதனால் மிக சோர்வு ஏற்பட்டு தொற்று பாதித்து உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் அவர்கள் இறக்கிறார்கள் என்று சங்கம் வேதனையோடு கூறியுள்ளது. இறந்தவர்களில் டெல்லியைச் சேர்ந்த டாக்டர் அனஸ் முஜாஹித் என்ற 25 வயது இளம் டாக்டரும், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற 90 வயதான மூத்த டாக்டரும் அடங்குவர்.

உலலை அச்சுறுத்திய கொரோனா முதல் அலையில் நாடு முழுவதும் 736 டாக்டர்கள் உயிரிழந்தார்கள். இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தில் 5 மாதங்கள் கழித்து, இந்தியாவின் சுகாதாரப் பணியாளர்களில் 66% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள டாக்டர்களை ஊக்குவிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரை 1000திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் இறந்துவிட்டதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் கூறினாலும், உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம். இந்திய மருத்துவ சங்கத்தில் கிட்டத்தட்ட 3.5 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமேபதிவு செய்து உள்ளனர். இருப்பினும், இந்தியாவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரனான டாக்டர் கேகே அகர்வால் (62) கொரோனா பாதிப்பால் நேற்றிரவு உயிரிழந்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற கேகே அகர்வாலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபப்ட்டுவந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். டாக்டர் கேகே அகர்வாலின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்

error: Content is protected !!