அதிக வருவாய் ஈட்டிய கட்சி அ.தி.மு.க : ஆய்வறிக்கை தகவல்!

அதிக வருவாய் ஈட்டிய கட்சி அ.தி.மு.க : ஆய்வறிக்கை தகவல்!

நம் நாட்டில் தேர்தல் ஆணையத்தில் அதிகளவில் கட்சிகள் பதிவுசெய்யப்பட்டு இருந்தாலும், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கைசொற்பமாகவே இருக்கும் சூழ்நிலையில் மாநிலகட்சிகளில் அதிக வருவாய் ஈட்டிய கட்சியாக அ.தி.மு.க. திகழ்கிறது. இதன் வருவாய் 48.88 கோடி ரூபாய் ஆகும்.

அவ்வப்போது அரசியல் கட்சிகளின் வருவாய் பற்றி ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 48 மாநில கட்சிகளில் ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதாதளம், தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட 16 கட்சிகளின் தணிக்கை அறிக்கை கிடைக்கவில்லை. இதர 32 மாநில கட்சிகள் 2016–17ம் ஆண்டில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த வரவு–செலவு கணக்குகள் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.

கடந்த 2016–17ம் ஆண்டில் 32 கட்சிகளின் மொத்த வருவாய் 321.03 கோடி ரூபாய். மொத்த செலவுகள் 435.48 கோடி ரூபாய். மாநில கட்சிகளில் அதிகப்படியான வருவாய் கொண்ட கட்சிகள் சமாஜ்வாடி, தெலுங்குதேசம் மற்றும் அ.தி.மு.க. ஆகும். இவற்றின் மொத்த வருவாய் 204.56 கோடி ரூபாய்.

இதில் சமாஜ்வாடி வருவாய் 82.76 கோடி ரூபாய், தெலுங்குதேசம் 72.92 கோடி ரூபாய், அ.தி.மு.க. 48.88 கோடி ரூபாய் ஆகும். இதில் 14 கட்சிகளின் வருவாய் முந்தைய ஆண்டைவிட குறைந்து விட்டது. 17 கட்சிகள் தங்களின் வருவாயில் ஒரு பகுதி செலவிடப்படாமலேயே உள்ளதாக கணக்கு காட்டி உள்ளன.

மாநில கட்சிகளில் சமாஜ்வாடி 147.1 கோடி ரூபாயும், அ.தி.மு.க..86.77 கோடி ரூபாயும், தி.மு.க. 85.66 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளது. மேற்கண்ட மாநில கட்சிகளின் வருவாய் அனைத்துமே மானியம், நன்கொடை, கட்சியினர் பங்களிப்பு, வங்கி டெபாசிட் வட்டிபோன்றவை மூலமே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. செலவினம் என்பது தேர்தல் செலவினங்கள், நிர்வாக மற்றும் பொதுவான செலவுகள் ஆகும்.

error: Content is protected !!