படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவதால் எம்புட்டு பலன் என்று தெரியுமா?
இப்போதெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் குறைவு. இதன் காரணமாக இளம் வயதிலேயே உடல்பருமன் ஏற்படுகிறது. படிக்கும் காலத்தில் ஏற்பட்ட இந்தப் பழக்கம், வேலைக்குச் செல்லும்போதும் தொடர்கிறது. படிக்கும் காலத்திலாவது நடந்து செல்வது, சைக்கிள் ஓட்டுவது என்று இருந்தவர்கள், வேலைக்குச் சென்ற பிறகு அதையும் குறைத்துக்கொள்கின்றனர். நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்யும்போது, உடல் உழைப்பு முற்றிலும் குறைந்துவிடுகிறது. உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாததால், உடலில் கொழுப்புப் படிய ஆரம்பிக்கும். இடுப்பு, வயிறுப் பகுதியில் கொழுப்பு அதிகரிக்கும்போது, அது இதய நோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்குக் காரணமாகிவிடுகிறது. இந்நிலையில் நம்மில் பலருக்கும் மலைப் பையும், ஆர்வமின்யையும் கொடுக்கும் படிக்கட்டுகளில் நாம் தொடர்ந்து நடப்பதே நமது உடலுக்கு நன்மைகள் பல அளிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம்.. பெரும்பாலும் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நீங்கள் பல முறை படிக்கட்டுகளில் நடக்க வேண்டும் என்ற நிலைமை இருந்தால் கவலை கொள்ள வேண்டாம், ஏனெனில் படிக்கட்டுகளில் நாம் ஏறி இறங்குவதால் பல நன்மைகளை அடைகிறோம் என ஆய்வுகள் கூறுகிறது…
வழக்கமாக வீட்டில் நாம் படிக்கட்டுகளில் நடக்கிறோம், ஆனால் அலுவலகத்தில் படிக்கட்டுகளுக்கு பதிலாக, லிப்ட் பயன்படுத்துகிறோம். ஆனால் லிப்டை தவிர்த்து நாம் படிக்கட்டுகளில் நடப்பது எவ்வளவு நன்மை தருகிறது என்று தெரிந்து கொண்டால் லிப்டை புறக்கணித்து விடுவீர்கள்..
அடிக்கடி படிக்கட்டுகளில் நடப்பது உங்கள் உடல் பருமனைக் குறைப்பது மட்டுமல்லாமல், உங்கள் மன அழுத்தத்தையும் குறைக்கும். படிக்கட்டுகளில் நாம் நடப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
எடையை விரைவாகக் குறைக்கும் – உங்கள் உடல் பருமனைப் பற்றி நீங்கள் கவலை கொண்டால், கவலை வேண்டாம் படிக்கட்டுகளில் நடைப்பயிற்சி தொடங்கினால் போதும். படிக்கட்டுகளில் நடைபயிற்சிக்கு நீங்கள் எவ்வளவு முயற்சி எடுக்கிறீர்களோ, அவ்வளவு பிரதி பலன் உங்களுக்கு கிடைக்கும். காரணம் படிக்கட்டுகளை நாம் ஏறி இறங்குவதால் நம் உடலின் கலோரிகள் அதிகமாக எரிக்கப்படுகின்றன.
வேகமாக உடல் எடையை குறைக்க தினமும் 10 முதல் 12 முறை படிக்கட்டுகளில் நடப்பது நல்லது. இதயத்திற்கு நன்மை பயக்கும் – படிக்கட்டுகளில் நடப்பதன் மூலம் உங்கள் இரத்த குளுக்கோஸுக்கு நன்மைகள் பல கிடைக்கிறது. தினமும் படிக்கட்டுகளில் நடப்பதன் மூலம், இதயம் சரியான வழியில் உந்தித் தருகிறது, உங்கள் உடலை பாதுகாக்க இதைவிட விலை குறைந்த மருந்து உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை.
மேலும் படிக்கட்டுகளில் நடப்பது மாரடைப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
தசைக்கு சிறந்த உடற்பயிற்சி – நடைபயிற்சி, ஜாகிங் அல்லது ஓடுவதன் மூலம் நமது தசைகள் பலப்படுத்தப்படுகின்றன. அதேப்போன்று நாம் படிக்கட்டுகளில் நடக்கும்போது, நம் கால்கள் மிகவும் அழுத்தமாக உணர்கிறது. நடைப்பயிற்சியில் நாம் பெரும் பலன்களை படிக்கட்டுகளில் நடப்பதன் மூலமும் நாம் பெறலாம். குறிப்பாக கால்களில் உள்ள பெரும்பான்மை கொழுப்புகள் படிக்கட்டில் நடப்பதால் குறைக்கப்படுகிறது.
மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் – நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பதாக உணரும் போதெல்லாம், படிக்கட்டுகளில் நடக்கத் தொடங்குங்கள். இது உங்களுக்கு மன திடத்தை அதிகரிக்கும் ஆற்றலை வழங்கும். படிக்கட்டுகளில் நடத்தல், உடல் பம்பின் இரத்தத்தை வேகமாக உந்துகிறது. மேலும் இது உங்கள் மனதை அழுத்தமில்லாமல் பாதுகாக்க உதவுகிறது.
வலுவான சகிப்புத்தன்மை – நீங்கள் படிக்கட்டுகளில் இறங்கும்போது உங்கள் சகிப்புத்தன்மை வலுவாக இருக்கும்.
அதிலும் ஆரம்பத்தில், நீங்கள் 3 முதல் 4 முறை படிக்கட்டுகளில் நடந்து கொண்டிருந்தால், படிப்படியாக உங்கள் சகிப்புத்தன்மை அதிகரிக்கும்.
படிக்கட்டுகளை எப்படி நடத்துவது – படிக்கட்டுகளில் நடக்கும்போது, உங்கள் முதுகு மற்றும் கழுத்து நேராக்கப் படுவதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் முதுகில் வளைந்து படிக்கட்டுகளில் நடந்தால், உங்கள் முதுகு மற்றும் கழுத்து இரண்டிலும் வலி ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
செந்தில் வசந்த்