செல்போன் வழியாக வரும் பேய் – ”கேக்காமலே கேக்கும்”

செல்போன் வழியாக வரும் பேய் – ”கேக்காமலே கேக்கும்”

சிவி பிலிம்ஸ் C.வெங்கடேஷ் தயாரிக்கும் “கேக்காமலே கேக்கும்”. சினிமா வந்த காலத்திலிருந்து பேய்க்கதைகள் என்றால் எப்போதும் ஒரு தனி மவுசு இருக்கும். பேய்க்கதைகள் என்பது ஆவி இன்னொரு உடம்புக்குள் ஊடுருவி பலி வாங்கும். இதுதான் பேய்க்கதைகளின் ஒன் லைன். “கேக்காமலே கேக்கும்” திரைப்படம் டெக்னாலஜி பேய்படம் செல்போனிலிருந்து பேய் ஊடுருவி இன்னொரு செல்போனுக்கு செல்கிறது, ஹாரர் மூவியின் அடையாளத்தையும் கொஞ்சம் மாறுபட்டு யோசித்திருக்கிறார். செல்போனில் பேய் ஊடுருவும் காட்சிகள் பார்ப்பவர்கள் திகில் கொல்லும் அளவுக்கு மிரட்டப்பட்டிருக்கிறது. கதைக்கேற்ப டெக்னாலஜிகள் நிறைய பயன்படுத்தப்பட்டிருக்கிறது.சென்னை, மன்னார், கொடைக்கானல், கர்நாடக மடக்கேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.புதுமுகங்கள் கிரண், திவ்யா, வந்தனா, பிரக்னா N.பாபு, மஞ்சுநாத், மது, ஜெயராஜ், பைரக கவுண்டர், நாகராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கிரிதர் திவான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் இயக்குனர் நரேந்திர பாபு படம் குறித்து பேசும்போது, ‘‘என் தாய் மொழி தமிழ் தான்! ஆனால் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவன். கே.பாலச்சந்தர் இயக்கிய சில சீரியல்கள், படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளேன். கன்னடத்தில் 4 படங்களை இயக்கியிருக்கிறேன். ஐந்தாவது படமாக ‘கேக்காமலே கேட்கும்’ படத்தை தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் இயக்கியிருக்கிறேன். சமீபகாலத்தில் நிறைய பேய் படங்கள் வெளியாகியுள்ளது.

அந்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இந்த படம் இருக்கும். இதில் இதுவரை யாரும் கையாளாத ஒரு விஷயத்தை கையாண்டிருக்கிறேன். நிஜத்தில் பேய், பிசாசு எல்லாம் கிடையாது என்பது என் நம்பிக்கை! இன்று அனைவர் கையிலும் இருக்கும் ஒரு பொருள் மொபைல் ஃபோன். அந்த மொபைல் ஃபோனை மையமாக வைத்து இந்த படத்தின் கதையை வித்தியாசமாக உருவாக்கியிருக்கிறேன். அந்த கதை என்ன என்பது படம் வெளியாகும் வரை சஸ்பென்சாக இருக்கட்டும்’’ என்றார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

error: Content is protected !!