புனித ஜார்ஜ் கோட்டை மதராசில்(சென்னை) கட்டி முடிக்கப் பட்டதினமின்று:

புனித ஜார்ஜ் கோட்டை மதராசில்(சென்னை) கட்டி முடிக்கப் பட்டதினமின்று:

மிழகத் தலைநகரான சென்னையின் முக்கிய அடையாளமாகத் திகழ்பவற்றில் முதன்மையானது புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George). இந்த கோட்டைதான் இன்றைய சென்னை மாநகரம் உருவாகவே காரணமாக இருந்தது. ஆம், இந்தியாவில் பிரிட்டீஷார் கட்டிய முதலாவது கோட்டை இதுதான். 1600ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த கிழக்கிந்தியக் கம்பெனி சூரத்தில் அனுமதி பெற்று தனது வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. அதன் பின்னர் தமிழக அரசின் தலைமை பீடமாக 75 ஆண்டுகளுக்கும் மேலாக திகழும் இந்த புனித ஜார்ஜ் கோட்டை, 1640இல் ஆங்கிலேயர்களால் கட்டபட்டு, நானுறு வருடங்களாக தமிழகத்தின் தலைவிதியை நிர்ணியித்து வரும் முக்கிய கேந்திராமாக விளங்குகிறது.

கொஞ்சம் விரிவாகச் சொவதானால் வங்கக் கடலில் தனது வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் தங்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அருகில் ஒரு துறைமுகம் இருந்தால் நன்றாக இருக்கும் என கிழக்கிந்தியக் கம்பெனியினர் கருதினர். அதற்காக நிலம் தேடும் பணி கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜெண்ட் பிரான்சிஸ் டே என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கிழக்குக் கடற்கரை ஓரத்தில் விஜயநகர அரசின் நிர்வாகிகளிடமிருந்து, ஒரு பொட்டல்வெளியை விலைக்கு வாங்கினார். அங்கு போர்ட் ஹவுஸ் என்ற சிறிய கட்டிடத்தை கட்டினார். இதனைத் தொடர்ந்து ஒரு துறைமுகமும், கோட்டையும் கட்டப்பட்டன. இந்த கோட்டை 1640ஆம் ஆண்டு, ஏப்ரல் 23ந் தேதி கட்டி முடிக்கப்பட்டது. அது புனித ஜார்ஜ் நினைவு தினம் என்பதால் அந்த கோட்டைக்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிட்டனர். அந்த கோட்டைதான் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

கூவம் ஆற்றையும், சில சிறிய மீனவர் ஊர்களையும் நோக்கிக் கொண்டிருந்த இந்த கோட்டைப் பகுதி விரைவிலேயே வணிக நடவடிக்கைகளின் ஒரு மையமானது. ஜார்ஜ் டவுன் என்னும் புதிய குடியேற்றப் பகுதி உருவாகக் காரணமாயிற்று. இது அங்கிருந்த ஊர்களையெல்லாம் தன்னுள் அடக்கி வளர்ந்து சென்னை நகரம் உருவாக வழி வகுத்தது. இது கர்நாடகப் பகுதியில் ஆங்கிலேயர்களின் செல்வாக்கை நிலை நிறுத்தவும், ஆற்காடு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டின அரசர்களையும், பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரரையும் கண்காணிப்பில் வைத்திருக்கவும் உதவியது. 6 மீட்டர் உயரமான சுவர்களைக் கொண்டிருந்த இக்கோட்டை, 18ஆம் நூற்றாண்டில் பல தாக்குதல்களை சமாளித்தது. பிரஞ்சுகாரர்கள் வசம் சில ஆண்டுகள் இருந்தது. ஹைதர் அலியின் தொடர் தாக்குதல்களை வெற்றிகரமாக சமாளித்தது.

கோட்டைக்குள் அமைந்திருக்கும் புனித மேரி தேவாலயம், வரலாற்று சிறப்பு மிக்கது. இந்தியாவில் ஆங்கிலேய சாம்ராஜிய உருவாக வித்திட்ட ராபர்ட் கிளைவின் திருமணம் இங்கு தான் நடைபெற்றது. மாவீரன் நெப்போலியனை இறுதி போரில் தோற்கடித்து சிறைபிடித்த வெல்லெஸ்லி பிரபு இளைஞராக இருந்த போது, புனித ஜார்ஜ் கோட்டையில் ராணுவ அதிகாரியாக பணி
புரிந்திருக்கிறார்.

இப்பேர்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்ட தினமின்று, 1640 ஏப்ரல் 23.

error: Content is protected !!