2022-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 5-ந் தேதி காலை 10:00 மணிக்கு கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அறிவித்துள்ளார்.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களின் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது. முன்னதாக, 2022-ஆம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி காலை 10:00 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என ஆளுநர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியிட்டபட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் அப்பாவு கடந்த டிசம்பர் 13ம் தேதி தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.
தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கின் 3வது தளத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை ஜனவரி 5ம் தேதி கூட உள்ளது என தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
“உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசு சார்பில் ரூபாய் 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என…
நம்மைப் பெருமைப்படுத்தும் ஒரு காலகட்டத்தின் கதை! ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டது.…
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த அக்டோபர் மாதம் தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இது…
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு…
நம் நாட்டில் பாலின சமத்துவமின்மை குறைந்து வருகிறது, சமூக அரசியல் செயல்பாடுகளில் அதிகரித்துவரும் பெண்களின் பங்கெடுப்பு தீர்மானிப்பவையாக உள்ளது. நாட்டின்…
பெருவெளியின் பிரம்மாண்டத்தோடு ஒப்பிடுகையில் மனிதன் மிகச்சிறிய வன்தான், ஆனால் அவன்தான் பேரண்டத்தை எதிரொலிக்கிற கண்ணாடி, அழகுற அதனை சித்தரிக்கும் கவிஞன்,…
This website uses cookies.