விளையாட்டு பிரியர்களுக்கு மறக்க முடியாத ‘83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பங்ஷன்!

விளையாட்டு பிரியர்களுக்கு மறக்க முடியாத ‘83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பங்ஷன்!

1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை கைப்பற்றிய காலக் கட்டம் பற்றிய ஒரு படம் பிரம்மாண்டமாக தயாராகிறது இல்லையா? கபீர் கான் இயக்கும் 83 என்ற தலைப்பிடப்பட்ட இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக ரன்வீர் சிங்குக்குப் பயிற்சி அளித்து உள்ளார் கபில் தேவ். மற்ற நடிகர்களுக்கு யஷ்பால் சர்மா, பல்விந்தர் சாது போன்ற வீரர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.

இதில் நடிகர் ஜீவா கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி கதாபாத்திரத்திலும் அப்போது கேப்டனாக இருந்த கபில் தேவ் கேரக்டரில் நடிகர் ரன்வீர் சிங்-கும் சுனில் கவாஸ்கர் கதாபாத்திரத் தில் தாஹிர் ராஜ் பஷின் -னும். மொஹிந்தர் அமர்நாத் கதாபாத்திரத்தில் நடிகர் சகிப் சலீம்-மும், திலிப் வெங்சர்கார் கதாபாத்திரத்தில் நடிகர் ஆதிநாத் கோத்தாரே-யும்,சையத் கிர்மானி கதாபாத்தி ரத்தில் ஷாஹில் கட்டர் ,ரும் நடிக்கப் போறாங்க..வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்க்கும் இதனை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட உள்ளனர்.

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் எண்டர்டெயின் மெண்ட், ஓய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து 83 படத்தின் தமிழ் பதிப்பை வெளியிட உள்ளது என்பதும் நாகார்ஜுனாவின் நிறுவனம் தெலுங்கு பதிப்பை வெளியிடுகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தப் படத்தின் புரொமோசனுக்காக அந்த 83 டீமில் இடம் பிடிச்ச ரியல் ஹீரோக் களும், நிழல் ஹீரோக்களும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி சென்னை சத்யம் தியேட்டரில் இப்போ நடந்துக்கிட்டிருக்குது.

இதுக்காக நேத்திக்கே சென்னை வந்துட்ட கபில் தேவ்-விடம் இந்தப் படத்தைப் பற்றி கேட்ட போது , “நான் தான் அணித் தலைவன். நான் அணியுடன் சேர்ந்திருப்பவன். எல்லோரும் அவர்களின் ஆட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். நான் என் ஆட்டத்தைப் பார்க்க மாட்டேன். அணியின் ஆட்டத்தைத்தான் பார்ப்பேன். அதுதான் கிரிக்கெட் என்பது. அது ஒரு தனி நபரைப் பற்றியது கிடையாது. எல்லோரும் 100 சதவீதம் முயற்சி செய்தார்கள். அப்படித்தான் உலகக் கோப்பையை வென்றோம்.

நாங்கள் என்ன செய்தோம் என்று தெரியும். திரைப்படத்தில் அதிலிருந்து எவ்வளவு எடுத்து படமாக்குவார்கள் என்பதைப் பற்றி கருத்து கூறுவது கடினம். எனவே நீங்கள் உங்கள் பக்கக் கதையைச் சொல்லலாம். அவர்கள் எடுப்பார்கள். அவர்கள் புத்திசாலிகள். தேவையான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள்.

முதலில் நான் கதையைக் கேட்டபோது குழப்பமாக இருந்தது. எப்படி அதைத் திரையில் சொல்வார்கள் என்பது தெரியவில்லை. அதைப் பற்றி பேச நிறைய இருக்கிறது. அது எப்படிப் படமாக வரும் என்பதில் எனக்குக் கவலையும் அக்கறையும் உள்ளது. ஆனால் எல்லாம் நல்லபடியாக இருக்கும் என்று நம்புகிறேன்” அப்படீன்னு சொல்லி இருந்தார்.

கமல்ஹாசனின் கமென்ட்டுக்காக காண்டாக் செஞ்ச போது ‘83 படத்தை தமிழில் வழங்குவதில் மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறேன். வரலாற்றின் வெற்றி பக்கங்களை அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் திரையில் உருவாக்கி வழங்குவதில் கர்வமும், பெருமையும் கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற சீரிய கருத்தை இந்த தேசத்து மக்களின் மனதில் விதைத்த வகையில், இந்த அணிக்கு சிறப்பு மரியாதை உண்டு.

முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கும் இந்த வெற்றியே சான்று. தன்னம்பிக்கை யும், மனத்திடமும் இந்த வெற்றிக்கு ஊக்க மருந்து. பல்வேறு மக்களுக்கு தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் தந்த கதை. கபில்தேவ் தலைமையில் மொத்த அணியும் போராடி உலக கோப்பையை வென்ற கதையை நம் மக்களுக்கு தமிழில் அளிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அப்படீன்னார்..

https://www.youtube.com/watch?v=JAzGa0g7y0c&feature=youtu.be

error: Content is protected !!