தமிழக சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது!

தமிழக சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது!

தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு புதனன்று (ஜனவரி 20) அறிவித்தார். இதுதொடர்பான மேலும் தகவல்களுக்கு தமிழக தேர்தல் ஆணையத்தின் elections.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணலாம்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு இடம் பெயர்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர், டிசம்பரில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதற்காக, நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி 29 லட்சத்து 72 ஆயிரத்து 899 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து, இவற்றை பரிசீலித்து தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கியது.

இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

தமிழகத்தில் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளார்கள். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845- வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 5.09 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்; புதிதாக 21.39 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பான மேலும் தகவல்களுக்கு தமிழக தேர்தல் ஆணையத்தின் elections.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணலாம். புதிதாக தங்கள் பெயர்களைச் சேர்க்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகளிடம் படிவம் எண் 6ஐ சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் www.nvsp.in என்ற இணையதளத்தைக் காணலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் Voter Helpline App என்ற மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!