பூமிப்பந்தோட உட்பகுதி வெப்பம் குறைஞ்சிக்கிட்டே வருதாமில்லே!

பூமிப்பந்தின் உள்பகுதி வெப்பம் மிக வேகமாக குறைந்து வருகிறது என்று கண்டறிந்துள்ளனர்.

பூமிப்பந்தின் உள் மையப்பகுதி, கொதிக்கும் பிழம்பாகவே இருந்து வருகிறது. ஆனாலும் கூட, பூமி உருவான போது இருந்ததைவிட, பூமி பந்தின் உள்பகுதி தீக்குழம்பின் வெப்பம், கடந்த 4.5 பில்லியன் ஆண்டுகளாக, குறைந்து வருகிறது என்பதை முன்பே அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழகம் மற்றும் ஈ.டி.எச்.ஜூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் கணக்குப்படி, முன்பு கணித்ததைவிட பூமிப் பந்தின் நடுவெப்பப்பகுதி வெப்பம் தணிந்து வருகிறது. நிலத்தின் ஆழ் மையப்பகுதியில் இருக்கும் தாதுக்கள் எந்த அளவுக்கு வெப்பத்தை தாக்குப் பிடித்து வைத்திருக்கும் என்பதை கணித்துப் பார்த்தபோது, பூமி நாம் எதிர்பார்த்ததைவிட வேகமாக தணிந்து வருகிறது என்பது தெரியவந்துள்ளது.

ஆனால், எத்தனை வேகமாக பூமிப்பந்தின் உள்பகுதி பிழம்பு குளிர்ந்து வந்தாலும், முற்றிலும் சூடு தணிந்து போவதற்கு இன்னும் சில பில்லியன் ஆண்டுகள் பிடிக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுவது, பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.